மே 4-க்கு பின் அதிமுகவுக்கு ஆதரவுஆட்சி அமைக்க தவெக கணக்கு

q7tvnews@gmail.com
1 Min Read

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்குப்பதிவு முடிந்து மே 4ம் தேதி முடிவுகளுக்காக ஒட்டுமொத்த மாநிலமும் காத்திருக்கும் நிலையில், கோட்டையை கைப்பற்றப் போவது யார் என்பதில் அதிமுக மற்றும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் இடையே ரகசியப் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

நம்பத்தகுந்த வட்டாரங்களின்படி, சென்னையின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு ரகசிய இடத்தில் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது. இதில் தவெக தரப்பில் மிக முக்கியமான இரு ‘பெரிய தலைகளும்’ அதிமுக தரப்பில் ஒரு முக்கியப் புள்ளியும் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது

.இந்த முதற்கட்ட பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கம், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அமையும் ஆட்சி குறித்த “பிளான் பி” (Plan B) என்று சொல்லப்படுகிறது.
ஒருவேளை அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை விடச் சில இடங்கள் குறைவாகப் பெற்றால், தவெக-வின் ஆதரவைப் பெற்று ஆட்சியமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

தவெக தரப்பிலிருந்து ‘துணை முதலமைச்சர்’ பதவி அல்லது மிக முக்கியமான துறைகள் கேட்கப்பட்டிருக்கலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.

இரண்டு கட்சிகளுமே திராவிடக் கொள்கைகளில் சில மாற்றங்களை விரும்புவதாலும், ஆளுங்கட்சியான திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றைப் புள்ளியில் இணைவதாலும், தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிக்கு வாய்ப்பு அதிகம் எனக் கருதப்படுகிறது.

தற்போது நடந்து முடிந்துள்ள பேச்சுவார்த்தை வெறும் முதற்கட்டமே. “வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் தெளிவாகத் தெரிந்த பின்னரே அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும். அதுவரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்” என இரு தரப்புமே மௌனம் காக்கின்றன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *