
விஜய் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, அவர் சிறு தவறும் செய்யக்கூடாது என்பதில் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருபவர் ஒருவர் இருக்கிறார். இப்போது அவர், விஜய்க்கு சிறந்த அரசியல் ஆலோசகராகவும் மாறியுள்ளார் என்றால், அது முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தான் என்று திமுகவினர் கூறுகிறார்கள். அத்துடன் தவெக தப்பு பண்ணட்டும் விடுங்க… அவர்கள் மக்கள் மத்தியில் எக்ஸ்போஸ் ஆகிவிடுவார்கள்.. ஸ்டாலினின் ஒவ்வொரு நடவடிக்கையும் விஜய்யை உஷாராக வைப்பதாக ஆதங்கப்படுகிறார். அதற்காக ஸ்டாலினுக்கு எதிராகவே மீம்ஸ் போடுகிறார்கள் திமுகவினர்.
தமிழ் புதல்வன் திட்டம் தொடர்பாக முதல் நாள் திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சிக்கிறார்… மறுநாளே அக்கவுண்டில் பணம் விழுகிறது.. அடுத்தாக மகளிர் உரிமை தொகை மே 15ம் தேதிக்குள் போட வேண்டும் என்று ஸ்டாலின் ட்விட்டரில் கேள்வி எழுப்புகிறார். மறுநாளே மகளிர் உரிமை தொகை 1000 ரூபாய் வங்கி கணக்குகளில் போடப்பட்டது.
முன்னதாக ஜோஷியர் பண்டிட் அரசு பணியில் அதுவும் முதல்வர் விஜய்க்கு ஆலோசகர் என்கிற ரீதியில் பதவியில் அமர்த்தப்பட்டார். இதுபற்றி விமர்சனங்களை வைத்தது திமுக தலைமை. இதனால் அடுத்த நாளே ஜோசியரின் பணி நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தவறுகளை சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்பவர்கள் நாங்கள் என்கிற ரீதியில் விஜய் ஒவ்வொரு நடவடிக்கையும் இருக்கிறது. இதனால் எங்களால் தான் உரிமை தொகை கிடைத்தது.எங்களால் தான் அரசே இயங்குகிறது என்று திமுக தலைமை கூறிவருகிறது. ஆனால் இது எல்லாம் தேவை இல்லாத ஆணி என்று திமுகவினரே முன்னாள் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக மீம்ஸ் போட்டு விமர்சிக்கிறார்கள்.
ஒவ்வொரு பிரச்சனையும் நடப்பதற்கு முன்பே கூறுவதால், மக்கள் மத்தியில் பிரச்சனை போய் சேருவதற்கு முன்பே, அவர்கள் அம்பலப்படுவதற்கு முன்பே கூறுவதால், விஜய் உஷராகிவிடுவதாக திமுகவினர் ஆதங்கப்படுகிறார். மகளிர் உரிமை தொகை விவகாரத்தில் அமைதியாக இருந்திருந்தால், அவர்களே மக்களிடம் அம்பலாகியிருப்பார்கள். அவர்களின் தவறுகளை எடுத்து சொல்லி அரசியல் செய்யலாம் என்று நினைத்தால், தவறுகளை நடக்கவிடாமல் திமுக தலைவர் ஸ்டாலின் தடுத்தால் எப்படி? என்று திமுகவினர் கேள்வி எழுப்புகிறார்கள்.
அவங்கள எப்படி ஆட்சி செய்ய வைக்கணும்ங்கிறது நம்ம கடமை இல்லை,
அவங்க ஆட்சில என்னன்ன கொடுமை நடக்குதுங்கிறது மக்கள்ட்ட எடுத்து சொல்றதுதான் நம்ம கடமை. சொன்னா புரிஞ்சுக்கோங்கயா.” என திமுக உடன்பிறப்புகள் அங்கலாய்த்து வருகின்றனர்.


