
சென்னையில் சட்டவிரோத பார்களை தடுக்க தவறியதாக எழுந்த புகாரில், திருவொற்றியூர் இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம் செய்து சென்னை போலீஸ் கமிஷனர் முதல் அதிரடி நடவடிக்கை எடுத்திருப்பதை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர். இதேபோல் தமிழ்நாடு முழுவதும் சட்டவிரோதமாக டாஸ்மாக் அல்லது தனியார் மதுபானக்கடைகளில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்ததை தடுக்க தவறினால் அந்த ஏரியா இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று முதல்வர் விஜய்க்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
இரவு 10 மணிக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டவுடன், ஆங்காங்கே சட்டவிரோத பார்களும், சில்லரை மது விற்பனை கடைகளும் போலீசாரின் துணையோடு செயல்படத் தொடங்கும் என்ற புகார்கள் நீண்ட காலமாகவே உள்ளது.இரவு 10மணிக்கு மேல் ஒரு குவாட்டர் 250 ரூபாய் என்று எழுதப்படாத சட்டம் போல் பல பார்களில் விற்பனையாகியும் வந்தது.இதுபற்றி மக்கள் புகார் அளித்தாலும் ஓரிருநாள் நடவடிக்கை இருக்கும்..
பின்னர் கண்டுகொள்ள மாட்டார்கள் என்ற புகாரும் உள்ளது. இந்த சூழலில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனரின் இந்த நடவடிக்கையால் சட்டவிரோத பார்களும், சில்லரை விற்பனை கடைகளும் இனிமேல் மூடப்படும் என்பது உறுதியாகி உள்ளது.
அதேநேரம் சட்டவிரோத சில்லரை மதுபான கடைகள் செயல்படுவது குறித்து கண்காணித்து அவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இரவு 10 மணிக்கு மேல் யாராலும் மது வாங்க முடியாத சூழ்நிலையை முதல்வர் விஜய் உருவாக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
அதேபோல் தமிழ்நாடு முழுவதும் சட்டவிரோதமாக டாஸ்மாக் அல்லது தனியார் மதுபானக்கடைகளில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்ததை தடுக்க தவறினால் அந்த ஏரியா இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று முதல்வர் விஜய்க்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


