வெயிலுக்கு முகம் கருப்பாகுதா?இத செஞ்சா பளபளனு மின்னுவீங்க

q7tvnews@gmail.com
1 Min Read

இந்த வெயிலில் அடிக்கடி வெளியில் சென்றுவிட்டு வந்தால் சருமத்தின் நிறம் பாதிக்கப்படும். அவற்றை சரியான முறையில் பராமரிப்பதற்கு பல வழிகள் உள்ளன.

இந்த மூலிகைப் பொடியை தயார் செய்து வீட்டில் வைத்துக் கொண்டால் அனுதினமும் பயன்படுத்தி பயன் பெறலாம். குளிப்பதற்கு மற்றும்  வெயிலில் சென்றுவிட்டு வந்தவுடன் அதிகமாக வெயில்படும் இடங்களில்,  ஊற வைத்துக் கழுவுவதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பச்சைப் பயிறு 250 கிராம், கடலைப்பருப்பு 250 கிராம், கஸ்தூரி மஞ்சள் 100 கிராம், பூலாங்கிழங்கு 250 கிராம், ஆவாரம் பூ 100 கிராம், ரோஜா இதழ் 150 கிராம் ஆகியவற்றை வாங்கி ஆவாரம் பூவை சுத்தம் செய்து காயவைத்து மற்ற பொருட்களோடு சீயக்காய் அரைக்கும் இயந்திரத்தில் போட்டு அரைத்து ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக்கொண்டு தினசரி காலையும், மதியமும், மாலையும், இரவும் முகத்தில் தேய்த்து உடனே கழுவி விடலாம். பளபளப்பும், மினுமினுப்பும் உடனே தெரியும்.

கடலைப்பருப்பு 250 கிராம்,  பச்சை பயிறு 250 கிராம், கார்போக அரிசி 250 கிராம் இவற்றை மிஷினில் அரைத்து வைத்துக் கொள்ளவும். முட்டையின் வெள்ளை கருவை எடுத்து அதில் சில துளிகள் தேனை கலந்து முகம், கை, கால், கழுத்து, உடல் முதலிய இடங்களில் தேய்த்து ஊறவைத்து பின்னர் மேலே கூறிய பொடியைத் தேய்த்துக் கழுவ பளபளப்பு கிடைக்கும்.

இதுபோல் எளிமையான முறையை பயன்படுத்தி ஆண்களும் பெண்களும் கோடை காலத்தில் சருமத்தின் நிறம் சுருங்காமலும், வறட்சி ஏற்படாமலும் பாதுகாக்கலாம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *