பிரவுன் மன்னனை மிஞ்சும் டிரம்ப்ரூ.2 லட்சம் கோடியை எரித்தது ஏன்?

q7tvnews@gmail.com
1 Min Read

ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா இதுவரை செலவழித்த மாபெரும் நிதியைக் கொண்டு, உலகெங்கிலும் வறுமையில் வாடும் 8.7 கோடி மக்களின் உயிரைக் காப்பாற்றியிருக்கலாம் என ஐ.நா.வின் (UN) மனிதாபிமான விவகாரங்களுக்கான தலைவர் டாம் பிளெட்சர் உலகை உலுக்கும் மாபெரும் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்!

பிப்ரவரி இறுதியில் தொடங்கிய ஈரான் போருக்காக அமெரிக்க ராணுவம் இதுவரை தோராயமாக 25 பில்லியன் டாலர்களை, அதாவது சுமார் 2 லட்சத்து 9 ஆயிரம் கோடி ரூபாயை வாரி இறைத்துள்ளதாகப் பென்டகனின் உயர்மட்ட நிதி அதிகாரி தெரிவித்துள்ளார

ஆனால், பென்டகன் கூறும் இந்த 25 பில்லியன் டாலர் என்பது மிகக் குறைத்துக் காட்டப்பட்ட ஒரு மாபெரும் பொய்க் கணக்கு என்றும், போருக்கான உண்மையான செலவு இதைவிடப் பல மடங்கு அதிகம் என்றும் உள்விவரம் அறிந்த வட்டாரங்கள் சிஎன்என் ஊடகத்திடம் அப்பட்டமாகத் தெரிவித்துள்ளன.

ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் (OCHA) தலைவர் டாம் பிளெட்சர் கூறுகையில், 2026-ஆம் ஆண்டிற்கான ஐ.நா.வின் ஒட்டுமொத்த நிவாரண நிதியே 23 பில்லியன் டாலர்கள் தான் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த 23 பில்லியன் டாலர்கள் மூலம் உலகெங்கும் உள்ள 8.7 கோடி மக்களுக்கு மாபெரும் உதவிகளை வழங்க முடியும்.

“இந்த ஆண்டு 8.7 கோடி மக்களின் உயிரைக் காப்பாற்ற எங்களிடம் ஒரு திட்டம் உள்ளது, அதற்கான செலவு 23 பில்லியன் டாலர்கள். அமெரிக்கா போருக்காகக் கொட்டிய அந்தப் பணம் எங்களிடம் இருந்திருந்தால், அந்த 8.7 கோடி உயிர்களை நாங்கள் எளிதாகக் காப்பாற்றியிருக்கலாம்” என அவர் உலக நாடுகளின் மனசாட்சியை உலுக்கும் அப்பட்டமான ஒப்பீட்டைச் செய்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *