
ஆயுர்வேதத்தின்படி, அதிகப்படியான எண்ணெய் பிசுபிசுப்பு மற்றும் நரை முடி போன்றவை ‘கபா’ (Kapha) தோஷத்தினால் ஏற்படுகிறது. இதற்கு வெளிப்புறப் பராமரிப்புடன் முறையான உணவுக் கட்டுப்பாடும் அவசியம். டை அடிக்க விருப்பம் இல்லாதவர்கள் இந்த மூலிகை பேஸ்ட் ஐ வீட்டிலேயே தயாரிக்கலாம்
மருதாணி பொடி, வேப்பிலை பொடி, நெல்லிக்காய் பொடி, வெந்தய பொடி ஆகிய 4 பொடிகளையும் ஒரு கிண்ணத்தில் சம அளவில் எடுத்துக் கொள்ளவும்.
அதனுடன் தேவையான அளவு தயிர் சேர்த்து நன்கு கலந்து பேஸ்ட் போலச் செய்து கொள்ளவும். தயிர் அலர்ஜி உள்ளவர்கள் தண்ணீர் பயன்படுத்தலாம்
இந்த கலவையை குறைந்தது 20 முதல் 30 நிமிடங்கள் அப்படியே ஊற வைக்கவும்.இந்த ஹேர் மாஸ்க்கை முடியின் வேர்க்கால்கள் முதல் நுனி வரை நன்கு தடவவும்.
சுமார் 1 முதல் 2 மணி நேரம் வரை தலையில் வைத்திருக்கவும்.
பின்னர் வெறும் தண்ணீரில் மட்டும் முடியை அலசவும்.
இந்த சிகிச்சையைச் செய்த அன்றே ஷாம்பு பயன்படுத்தக் கூடாது. குறைந்தது 24 மணிநேரம் கழித்தே ஷாம்பு போட வேண்டும். வாரத்திற்கு ஒருமுறை அல்லது அதிக பாதிப்பு இருந்தால் வாரத்திற்கு இரண்டு முறை இதனைப் பயன்படுத்தலாம்.
இதை சரியாக 3 மாதங்கள் செய்தால் தலையில் வெள்ளை முடி காணாமல் போய் விடும்.


