
Heat stock என்பது ஏப்ரல் மே மாத காலங்களில் பொது மக்களுக்கு வெயில் தாக்கத்தால் ஏற்படக்கூடிய ஒரு பொதுவான ஒரு பாதிப்பு ஆகும். தமிழகத்தில் வெப்பம் அதிகரிப்பது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் அவ்வைபோது தகவல் கொடுத்துக் கொண்டிருக்கிறது. காலை 11 மணியிலிருந்து மாலை 4 மணி வரை அத்தியாவசியம் இன்றி வெளியே வராமல் இருப்பது நல்லது
அப்படி வெயிலில் செல்லும்போது காட்டன் ஆடைகளை அணிந்து செல்வது தான் அனைவருக்கும் நல்லது எனவும் வெயிலில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஒரு சில இடைவெளியை எடுத்துக் கொள்ள வேண்டும்
ஒரு மணி நேரத்தில் 45 நிமிடங்கள் வேலை செய்து 15 நிமிடம் ஓய்வு எடுக்க வேண்டும். நீர் சத்தின் இழப்பை பூர்த்தி செய்து சிறிது நேரம் வேலை செய்ய வேண்டும் அதாவது மாலை 4 மணிக்கு பிறகு வெளியில் வேலை செய்பவர்கள் வேலை செய்யலாம் அப்போது தான் வெயில் காலங்களில் ஏற்படும் பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும்
குழந்தைகள் வெளியே தான் விளையாட விரும்புவார்கள். அவர்களை வீட்டுக்குள்ளே வைத்து விளையாட சொல்லிக் கொடுக்கலாம். அப்படி வெயிலில் செல்லும் போது தொப்பி அணிவது, குடை எடுத்துச் செல்வது தேவையான குடிநீர் மற்றும் நீர்சத்து பொருட்களை உதாரணத்திற்கு இளநீர் வெள்ளரிக்காய் பழங்கள் காய்கறிகள் சாப்பிட வேண்டும். வெளியே செல்லும் கர்ப்பிணி பெண்கள் விரைவாக வீட்டுக்கு வர வேண்டும்
வெயில் காலத்தில் சர்க்கரை பானங்கள் எடுத்து கொள்வது சோர்வை மட்டுமே கொடுக்கும், குளுக்கோஸ் மற்றும் அதிக சக்கர பானங்களை எடுத்து கொள்ள கூடாது அப்படி எடுத்து கொண்டால் நீர் இழப்பு அதிகமாகும் அதிகம் சோர்வடைவார்கள்
வெயிலில் இருந்து தற்காத்து கொள்ள ஓஆர்எஸ் பவுடர் எடுத்துக் கொள்ளலாம் மோர் இளநீர் நுங்கு ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம்
Heat stock ஏற்படும் போது முதலில் தோல் வறண்டு நாக்கு வறட்சியாக காணப்படும். வேர்வை வராமல் இருப்பது, நீர்ச்சத்து குறைந்து காணப்படும், உடல் சூடு அதிகமாக இருப்பது, காய்ச்சல் போல் இருப்பது, நாக்கு வளர்ச்சி, தலை சுற்றல், கால் சதை இழுப்பது, நீர்ச்சத்து குறைபாடு ஆகிய அறிகுறிகள் இருந்தால் அவர்கள் மருத்துவரை அணுக வேண்டும்


