சிறுநீரில் செக்கச்சிவந்த ரத்தம்இஸ்ரேல் பிரதமருக்கு கொடிய நோய்

q7tvnews@gmail.com
1 Min Read

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தான் சமீப காலமாக புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்ததாக தெரிவித்திருக்கிறார். ஒரு வழக்கமான மருத்துவப் பரிசோதனையின் போது எதிர்பாராத விதமாக இது கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

“76 வயதான நெதன்யாகுவுக்கு ஆரம்பக்கட்ட புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. ஒரு வழக்கமான மருத்துவப் பரிசோதனையின் போது சிறிய அளவிலான கட்டி கண்டறியப்பட்டது. இதற்கு கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்பட்டது.சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது, தற்போது அவர் உடலில் நோய்க்கான அறிகுறிகள் ஏதும் இல்லை. இதனை ஹதாசா மருத்துவமனையின் புற்றுநோயியல் பிரிவு இயக்குநர் அஹரோன் போப்போவ்ட்சர் உறுதிப்படுத்தியுள்ளார்

இந்தத் தகவலை வெளியிடுவதில் சுமார் இரண்டு மாதங்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதற்கான காரணத்தை நெதன்யாகு தனது சமூக வலைதளப் பக்கத்தில் விளக்கியுள்ளார். அதாவது, ஈரானுக்கு எதிரான போர் தீவிரமாக இருந்த சமயத்தில் இந்தத் தகவலை வெளியிட்டால், அது இஸ்ரேலுக்கு எதிராகப் தவறான பிரச்சாரங்களை உருவாக்கக்கூடும் என்பதால் ரகசியமாக வைத்திருந்ததாகக் கூறியுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் அமெரிக்க-இஸ்ரேல் படைகள் ஈரான் மீது தாக்குதல் நடத்தியபோது, நெதன்யாகு இறந்துவிட்டதாக AI மூலம் உருவாக்கப்பட்ட போலிப் படங்கள் ஈரானிய ஊடகங்களில் பரவின. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே தற்போது இந்த உண்மை நிலையை அவர் அறிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *