ஒன்று வந்தால் 4 வெடிக்கும்..!டிரம்ப்பை மிரளவிட்ட ஈரான்

q7tvnews@gmail.com
1 Min Read

ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த ட்ரம்ப், ஈரானில் எண்ணெய் குழாய்களில் இருந்து கொள்கலன்களிலோ அல்லது கப்பல்களிலோ எண்ணெயை நிரப்ப முடியாததால், ஏதேனும் ஒரு காரணத்தால் குழாய் மூடப்பட்டால், அந்த குழாய் வெடித்துவிடும் என்று கூறியுள்ளார்.

அது திடீரென வெடித்துச் சிதறும் ஒரு நிகழ்வு என்றும், அது நடப்பதற்கு இன்னும் 3 நாட்கள் தான் உள்ளது என்றும் அவர்கள் கூறுவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்

ட்ரம்ப்பின் இந்த அச்சுறுத்தலுக்கு பதிலடி கொடுத்துள்ள ஈரான் எரிசக்தி மேம்படுத்துதல் மற்றும் மேலாண்மை அமைப்பின் தலைவர் இஸ்மாயில் சகப் எஸ்பஹானி, அமெரிக்காவின் இந்த முற்றுகையின் விளைவாக, எண்ணெய் கிணறுகள் உள்ளிட்ட எங்களது உள்கட்டமைப்பிற்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால், அவர்களுக்கு ஆதரவளிக்கும் வளைகுடா நாடுகளில் அதே போன்ற உள்கட்டமைப்புகளுக்கு, எங்களுக்கு ஏற்பட்ட சேதத்தை விட நான்கு மடங்கு அதிக சேதத்தை நாங்கள் ஏற்படுத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், எங்களின் கணிதமே வேறு என்று கூறியுள்ள அவர், “1 எண்ணெய் கிணறு = 4 எண்ணெய் கிணறுகள்“ என்று கூறி பீதியை கிளப்பியுள்ளார்.
இதனிடையே, தனது பாகிஸ்தான் பயணத்தை முடித்துக்கொண்டு ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு சென்றுள்ளார் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி. இதுவும் டொனால்ட் டிரம்ப்க்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *