அஜித் விஜய் இருவரையும் இணைத்து புதிய படத்தில் நடிக்கப் போறாங்களா?

q7tvnews@gmail.com
1 Min Read

தமிழ் திரையுலகில் நீண்ட காலமாக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வரும் அஜித்-விஜய் நட்பு குறித்து, இயக்குனர் வெங்கட் பிரபு அளித்த பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பேட்டியில், நடிகர் அஜித் குமார் மற்றும் நடிகர் விஜய் ஆகியோரின் நிஜ வாழ்க்கை, மற்றும் கேரக்டர் குறித்து அவர் பகிர்ந்த தகவல்கள் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை பெற்றுள்ளன.

அஜித் குமார் மிகவும் ஓபனாகவும், எமோஷன்களை வெளிப்படையாக காட்டும் தன்மை கொண்டவராகவும் இருப்பார். சில சமயங்களில் நம்மை திடீரென்று பார்த்தால் கட்டிப்பிடிக்கும் போதுகூட சில கெட்ட வார்த்தைகள் எல்லாம் பேசி சந்தோஷமா கட்டிப்பிடிப்பாரு என, சிரித்தபடியே வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

அஜித் குமார் மற்றும் விஜய் ஆகிய இருவரையும் வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்பது வெங்கட் பிரபுவுக்கு நீண்டநாள் ஆசையாக இருந்ததாம். இதுகுறித்து இருவரிடமும் ஒருமுறை பேசியபோது, இருவரும் ‘நான் தான் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பேன்’ என்று என் கண்முன்னே சண்டை போட்டுட்டு இருந்தாங்க. அப்ப நான் கதை கூட ரெடி பண்ணல அதற்கு முன்னே இப்படி சண்டை போடுறீங்களே என்று கேட்டேன். ஆனா ரெண்டு பேருமே என்ன வேணாலும் கதையை வச்சுக்கோங்க.. ஆனா வில்லனா நான் தான் நடிப்பேன்னு சொல்லிக்கிட்டே இருந்தாங்க என்றும் பழைய நினைவுகளை வெங்கட் பிரபு கூறியிருக்கிறார்.

இந்த நிலையில், அஜித்-விஜய் இணைந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மீண்டும் அதிகரித்துள்ளது. வெங்கட் பிரபுவின் இந்த பேட்டி, அந்த எதிர்பார்ப்பை மேலும் தூண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *