இப்படி நடைபயிற்சி செய்யாதீங்கஉடலை ஒன்றுமே செய்ய முடியாது

q7tvnews@gmail.com
1 Min Read

காலையில் வெறும் வயிற்றில் நடைப்பயிற்சியோ, உடற்பயிற்சியோ மேற்கொள்வது அனைத்து வயதினருக்கும், உடல்நல குறைபாடுகள் உள்ளவர்களுக்கும் ஏற்றதாக இருப்பது இல்லை. 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கும் 40 வயதை கடந்தவர்களும் இந்த காலகட்டத்தில் வெறும் வயிற்றில் நடைப்பயிற்சி செய்யும் போது ரொம்ப கவனத்துடன் செயல்படுவது அவசியம்.

கோடையில் நன்கு உடல் ஆரோக்கியம் உள்ளவர்கள் மட்டும் காலை வேளையில் வெறும் வயிற்றில் நடைபயிற்சி செய்யலாம். இவர்களும் தங்களது மொத்த நடைப்பயிற்சி தூரத்தில் 20 சதவீதம் குறைத்துக் கொள்வது நலம்.

மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, நீரழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த காலகட்டத்தில் வெறும் வயிற்றில் நடைப்பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும். இவர்கள் நீர்ச்சத்து குறைபாட்டால் எளிதில் பாதிக்க வாய்ப்புகள் உள்ளது.

நீரழிவு நோயாளிகள் வெப்ப அலைகளில் தங்களது ரத்த சர்க்கரை அளவை இழப்பார்கள். திடீரென்று ரத்தத்தில் சர்க்கரையின் அளவு பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட குறையும்போது தலைசுற்றல், மயக்கம், சோர்வு போன்ற திடீர் உடல்நலக் கோளாறுகளினால் பாதிக்கப்படலாம்.

அதனால், இவற்றில் இருந்து தப்பிக்க, அவர்கள் ஏதேனும் சிறிய அளவில் லேசான உணவுகள் வகைகளை சாப்பிட்ட பின்னர் நடைபயிற்சி செய்யலாம். இவர்கள் காலையில் காபி, தேநீர் போன்ற நீர் சத்துக்களை வற்ற செய்யும் பானங்களை அருந்தாமல், நீர் சத்து மிகுந்த மோர், நீராகாரம், தண்ணீர் போன்றவற்றை அருந்தி விட்டு நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *