தவெக விஜய் விரைவில் கைதுடிஜிபிக்கு டெல்லி போட்ட உத்தரவு

q7tvnews@gmail.com
1 Min Read

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளை பயன்படுத்தியதற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் மற்றும் அவரது பிரச்சார குழுவினர் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் அதாவது JJ Act, 2015 இன் பிரிவு 70 மற்றும் 8-ன் கீழ், டிஜிபி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல விஜய் மீது தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குழந்தைகள் நல ஆணையம் தனது பரிந்துரையை வைத்துள்ளது.

எனவே,  சிறார் நீதி சட்டத்தின் கீழ் விஜய் மீது சட்ட நடவடிக்கை பாய வாய்ப்புள்ளதால் இந்த விவகாரம் விஜய்க்கு புதிய தலைவலியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

முன்னதாக தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின் போது குழந்தைகளை கவரும் விதமாக பேசியிருந்தார். மேலும் குழந்தைகள் தன் அம்மா, அப்பாவிடம் அடம்பிடித்து விசிலுக்கு ஓட்டு போட சொல்லுங்கள் என்பது போல் பேசியிருந்தார்.விஜய்யின் இந்த வீடியோவை பார்த்த குழந்தைகள் பலரும் விசிலுக்கு ஓட்டு போட வலியுறுத்தி தாய், தந்தைகளிடம் நச்சரித்ததையும் பார்க்க முடிந்தது. ஒவ்வொரு வீடுகளிலும் விஜய்க்கு ஆதரவாக குழந்தைகளே பேசிய வீடியோக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தேர்தல் ஆணைய விதிகளின்படி குழந்தைகளை நேரடியாகவோ, மறைமுகமாகவோ அரசியல் செயல்பாடுகளில் பயன்படுத்த கூடாது..

இந்த நிலையில், விஜய் மீது தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குழந்தைகள் நல ஆணையம் தனது பரிந்துரையை வைத்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *