
தவெக தலைவர் விஜய், இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவுக்கு செல்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் அனைத்து புனித தலங்களுக்கும் அவர் செல்லவிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து, ஒட்டுமொத்த மாநிலமும் தேர்தல் முடிவுகளுக்காகக் காத்திருக்கும் வேளையில், த.வெ.க தலைவர் விஜய் அமைதியான முறையில் தனது ஆன்மீகப் பயணத்தைத் தொடர்ந்து வருகிறார்
திருச்செந்தூர் முருகன் கோவில், ஷீரடி சாய்பாபா ஆலயம் என இதன் தொடர்ச்சியாக, இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவுக்கு விஜய் செல்ல திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. ஆனால் மெக்காவுக்கு செல்ல சில விதிமுறைகள் இருப்பதாக சமூகவலைதளவாசிகள் தெரிவிக்கிறார்கள். இஸ்லாமியர் அல்லாதவர்கள் மெக்கா செல்ல முடியாது என்றும் சிலர் தெரிவிக்கிறார்கள். ஹஜ் பயணம் தொடங்கும் போதுதான் மெக்கா செல்ல முடியும். நினைத்த நேரத்திற்கு செல்ல முடியாது என்றும் நெட்டிசன்கள் சொல்கிறார்கள்
விஜய்யின் இந்தத் தொடர் ஆன்மீகப் பயணங்கள் வெறும் வேண்டுதல்கள் மட்டுமல்ல, அவை ஒரு தெளிவான அரசியல் செய்தியைச் சுமந்து நிற்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்:
வெற்றி நிச்சயம்” என்ற நம்பிக்கையில் இருக்கும் த.வெ.க தொண்டர்கள், விஜய்யின் இந்த ‘ஆன்மீக டூர்’ புகைப்படங்களை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.


