நடிகர் விஜய் வீடு இடிக்கப்படுகிறதுதிடீர் முடிவுக்கு என்ன காரணம்?

q7tvnews@gmail.com
1 Min Read

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய், திரையுலகில் அறிமுகமான காலகட்டத்தில் தனது தாய், தந்தையுடன் நீண்ட காலம் வசித்து வந்த சென்னையின் சாலிகிராமம் வீட்டை தற்போது இடிக்க முடிவெடுத்துள்ளாராம்..

பல ஆண்டுகள் பழமையான அந்த வீடு தற்போதுள்ள நவீன வசதிகளுக்கு ஏற்ப இல்லாமல் மிகவும் பழைய தோற்றத்தில் இருப்பதால், அதனை முழுமையாக இடித்துவிட்டு மாடரனான முறையில் மாற்றுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது

ஒரு காலத்தில் விஜய் குடும்பத்தினருடன் வாழ்ந்த இந்த வீட்டில், பின்பு இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி வாடகைக்கு குடியிருந்தார்; தற்போது அவரும் அந்த வீட்டை காலி செய்துள்ளார்

இடிக்கப்படும் அந்த இடத்தில், பல மாடிகளை கொண்ட புதிய அடுக்குமாடி குடியிருப்பை கட்ட போகிறாரா அல்லது பிரம்மாண்டமான தனி பங்களா கட்டப்போகிறாரா என்பது குறித்த உறுதியான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.

இந்த சாலிகிராமம் வீட்டை புதிதாக கட்டி, தனது கட்சியின் முக்கிய அலுவலகமாகவோ அல்லது கட்சி பணிகளுக்கான இடமாகவோ மாற்ற வாய்ப்புள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

அண்மையில் தான் அண்ணா நகரில் இருந்த வீட்டை விற்றார் விஜய். அது ரூ. 35 கோடிக்கு விலை போனதாம். தேர்தல் செலவுக்காக அல்ல மாறாக விவாகரத்து வழக்கு நடந்து வருவதால் விற்றுவிட்டார் என்று பேசப்பட்டது

தற்போது விஜய் தனது குடும்பத்தினருடன் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூர் வீட்டில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *