விஜய் வீட்டில் நடிகை சூட்டிங்?அஜித் ரொம்ப வருத்தப்பட்டாரு..!

q7tvnews@gmail.com
1 Min Read

90-களில் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகையாக இருந்த சுவாதி, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது ஆரம்ப கால அனுபவங்கள் குறித்து அவர் பகிர்ந்துள்ள தகவல்கள் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பேட்டியில், தனது முதல் படமான தேவா படத்தின் போட்டோஷூட் சம்பவத்தை சுவாதி நினைவுகூர்ந்துள்ளார். அந்த படத்தை இயக்கிய எஸ். ஏ. சந்திரசேகர் வீட்டிலேயே ஹீரோ-ஹீரோயின் போட்டோஷூட் நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாம். அதற்காக சுவாதியும் சென்றிருந்தாராம். அப்போது கேமராமேன் “இப்படி நின்று கொள்ளுங்கள், அப்படி போஸ் கொடுங்கள்” என்று சொல்ல, அதற்கேற்ப அவர் போஸ் கொடுத்து கொண்டிருந்ததாக கூறினார்.

அந்த நேரத்தில் திடீரென ஒருவர் அங்கு வந்து புகைப்பட போஸ் கொடுப்பதற்காக, நடிகை சுவாதி தோளில் கை வைத்தாராம். அவரை பார்த்த சுவாதிக்கு யார் என்று தெரியாமல் குழப்பமாக இருந்ததாம். பின்னர் “இவர்தான் இந்த படத்தின் ஹீரோ” என்று சொல்லியபோது தான், அது விஜய் என்று தெரிந்ததாக சுவாதி தெரிவித்துள்ளார். “

இதையடுத்து சுவாதி, அஜித் குமார் உடன் வான்மதி மற்றும் உன்னைத்தேடி போன்ற படங்களில் நடித்தார். குறிப்பாக “வான்மதி” படப்பிடிப்பு காலத்தில் அஜித் மிகவும் அமைதியானவராக இருந்ததாகவும், சினிமா பின்னணி இல்லாததால் தனக்கு யாரும் இல்லை என்ற வருத்தத்தை அஜித் குமார் பகிர்ந்ததாகவும் சுவாதி கூறியுள்ளார். நடிகர் அஜித் குமாரின் இந்த வருத்தம் தம்மை பெரிதும் கவலை அடையச் செய்ததாக நடிகை சுவாதி தெரிவித்துள்ளார்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *