
தமிழ் சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் நடிகர் விஜய்யைச் சுற்றி தொடர்ந்து எழும் விமர்சனங்கள் மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளன. குறிப்பாக, நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா இடையிலான நட்பு குறித்து சமூக வலைதளங்களில் பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் இது குறித்து நடிகை ஷகிலா வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
ஒரு தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசிய ஷகிலா, விஜய் ஏன் தான் அரசியலுக்கு வந்தார்ன்னே தெரியல.. அவர் அரசியலுக்கு வந்த பிறகு அவரை பற்றி என்ன என்னலாமோ பேசுறாங்க. அதுவும் நடிகை திரிஷா கூட அவர் ஒரு நிகழ்ச்சிக்கு வந்தது பற்றி தப்பு தப்பா பேசுறதை பாக்கும்போதே கடுப்பா இருக்கு, ஒரு ஆண், ஒரு பெண் நல்ல நண்பர்களாக இருக்கக் கூடாதா? ஏன் ஒரு சாதாரண நட்பை கூட சந்தேகத்துடன் பார்க்க வேண்டும்?” என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்
மேலும், பொது நிகழ்வுகளில் ஒன்றாக வருவது, ஒரே மாதிரியான உடை அணிவது போன்ற விஷயங்களை வைத்து தேவையற்ற கதைகளை உருவாக்குவது சரியல்ல, இந்த விமர்சனங்கள் தனிப்பட்ட எல்லைகளை மீறி நடிகர்களின் தனியுரிமை பாதிக்கப்படுகிறது. ஒரு நடிகரின் குடும்ப வாழ்க்கை, அவரது சொந்த விஷயம். அதை வைத்து அவரின் பொது வாழ்க்கையையும், சமூகப் பணிகளையும் மதிப்பிடுவது தவறு” என்று ஷகிலா கருத்து தெரிவித்துள்ளார்.
விஜய் அரசியலுக்கு வந்ததால் எல்லோரும் அவரை விமர்சிக்கிறார்கள். ஆனால் அவருடைய அரசியலை மட்டும் தானே விமர்சிக்க வேண்டும்? அதை விட்டுட்டு அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி எல்லாம் பேசுறாங்க.. அவரை பற்றி பேசுறவங்களிடம் நான் ஒரு கேள்வி கேட்கிறேன்.. அவங்களோட வாழ்க்கை மட்டும் ரொம்ப ஒழுங்கா இருக்கா? என ஷகிலா கொந்தளித்து உள்ளார்


