
தமிழக சட்டசபை தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை பிடிக்கும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். மேலும் மே 4 ஆம் தேதி அவர் அரியணை ஏறுவது உறுதி என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரபல ஜோதிடர் ஷெல்வி, விஜய்யின் ஜாதகத்தை ஆய்வு செய்து ஒரு மிக முக்கியமான விஷயத்தைப் பகிர்ந்துள்ளார். விஜய்யின் ஜாதகத்தில் தற்போது ‘நீச்சபங்க ராஜயோகம்’ மிக உச்சகட்டத்தில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
நீச்சபங்க ராஜயோகத்தின் விசேஷங்களை இங்கு நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
அதில் முதலாவது சக்கரவர்த்தி யோகம். இது ஒருவரைச் சாதாரண நிலையில் இருந்து மிக உயர்ந்த அதிகாரப் பதவியில் அமர்த்தும் வலிமை இந்த யோகத்திற்கு உண்டு.
அடுத்து வயதுக் கணக்கு: சிலருக்கு இளமையிலேயே வரும் இந்த யோகம், ஒரு சிலருக்கு 52 வயதிற்குப் பிறகு அசுர பலத்தைத் தரும். தற்போது விஜய்க்கு அந்த அதிர்ஷ்டக் காலகட்டம் கனிந்துள்ளதாகக் கருதப்படுகிறது.
மே 4 “அன்று நாடே எதிர்பார்க்காத ஒரு முடிவு வரப்போகிறது” என ஷெல்வி குறிப்பிட்டிருப்பது, விஜய்யே தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்ற பிம்பத்தை வலுவாக்கியுள்ளது.
மற்ற ஜோதிட நிபுணர்களின் கருத்துப்படி, மே 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் போது, விஜய்க்குச் சாதகமான கிரகப் பெயர்ச்சிகள் நடக்கின்றன.பதவி யோகத்தை உறுதிப்படுத்தும் கிரக நிலைகள் விஜய்க்குத் தற்போது மிக வலுவாக உள்ளதாக கூறப்படுகிறது.
விஜய்யின் வருகை வாக்குகளைப் பிரிப்பது மட்டுமல்லாமல், ஒரு புதிய அரசியல் அத்தியாயத்தையே எழுதும் என்கிறார்கள் ஜோதிடர்கள்.
இது ஜோதிட நிபுணர்கள் மற்றும் நிலவும் சர்வேக்களின் அடிப்படையில் வெளியிடப்பட்ட தகவல்களின் தொகுப்பாகும். முடிவுகள் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பொறுத்து மாறுபடும்.


