பைக் ஓட்டுவோருக்கு முக்கிய செய்தி – வந்தா பாத்துபோம்னு இருக்காதீங்க

q7tvnews@gmail.com
1 Min Read

நவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப வாகன பதிவு முறை தொடங்கி நம்பர் பிளேட் வரை பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்ட வண்ணம் உள்ளன. அந்த வகையில் அனைத்து வாகனங்களிலும் முக்கியமான அப்டேட் செய்யப்பட்டிருக்க வேண்டும் என போக்குவரத்து துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பழைய வாகனங்களை வைத்திருப்பவர்கள் இதனை செய்யாமல் விட்டால் கடும் அபராதத்தை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அனைத்து வாகனங்களிலும் உயர் பாதுகாப்பு கொண்ட நம்பர் பிளேன் அதாவது HSRP (High-Security Registration Plate) வகை பதிவு எண் பலகை தான் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என நீண்ட காலமாகவே அரசு அறிவுறுத்தி வருகிறது. இருந்தாலும் பழைய வாகனங்களை பயன்படுத்தும் பலரும் அதனை அப்டேட் செய்யாமல் பழைய நம்பர் பிளேட்டை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் தான் HSRP நம்பர் பிளேட் பொருத்தவில்லை என்றால் பத்தாயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக உங்கள் வாகனத்தில் அதிக பாதுகாப்பு கொண்ட HSRP நம்பர் பிளேட் இல்லை என்றால், இனி உங்களால் வாகன புகை பரிசோதனை சான்றிதழை பெற முடியாது என்றும் போக்குவரத்து துறை தரப்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 1, 2019-க்கு பிறகு வாங்கப்பட்ட அனைத்து புதிய வாகனங்களுக்கும் விற்பனையின்போதே இந்த HSRP நம்பர் பிளேட் பொருத்தப்பட்டு இருக்கும். ஆனால், ஏப்ரல் 1, 2019-க்கு முன்பு வாங்கப்பட்ட பழைய வாகனங்களுக்கும் இந்த நம்பர் பிளேட்டை பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வாகன உரிமையாளர்கள் https://www.bookmyhsrp.com/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலமாகவே இதற்கு விண்ணப்பிக்கலாம். உங்களின் மாநிலம், ஆர்சி, வாகன பதிவு எண், இன்ஜின் எண் மற்றும் சேஸிஸ் எண் ஆகியவற்றை உள்ளிட்டு விண்ணப்பம் செய்து கட்டணம் செலுத்த வேண்டும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.200 முதல் ரூ.500 வரையிலும், நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.600 முதல் ரூ.1,500 வரையிலும் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *