லைசென்ஸ் எடுக்க 8 போட வேண்டாம்வரப்போகுது அரசின் சூப்பர் அறிவிப்பு

q7tvnews@gmail.com
1 Min Read

லைசென்ஸ் எடுக்க 8 போட வேண்டாம்
வரப்போகுது அரசின் சூப்பர் அறிவிப்பு

முன்பெல்லாம் டிரைவிங் லைசென்ஸ் எடுப்பது என்றால் ஒரு பெரிய போராட்டமாகவே இருந்தது. ஆர்டிஓ அலுவலகத்தில் நாள் கணக்கில் காத்திருப்பது, வேலைகளை விட்டுவிட்டு அலைய வேண்டியது எனப் பொதுமக்கள் பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சமல்ல. ஆனால் இப்போது அந்த நிலைமை அடியோடு மாறிவிட்டது. நீங்கள் ஒரு புது வாகன ஓட்டியாக இருந்தால், இந்த மாற்றங்களை அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்

மத்திய அரசு கொண்டு வரப் போகும் புதிய விதிகளின்படி, நீங்கள் அங்கீகரிக்கப்பட்ட தனியார் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளிலேயே பயிற்சியை முடித்துவிடலாம். அங்கு நடத்தப்படும் தேர்வில் நீங்கள் தேர்ச்சி பெற்றால் போதும், அவர்களே உங்களுக்குச் சான்றிதழ் வழங்கி விடுவார்கள்

அந்த சான்றிதழை வைத்தே நீங்கள் உரிமம் பெற முடியும். இதன் மூலம் இனி ஆர்டிஓ அலுவலகத்தில் தேர்வுக்காக வரிசையில் நிற்க வேண்டிய கட்டாயம் இல்லை. இதனால் நேரம் மிச்சமாகும், அலைச்சலும் குறையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

இப்போது பெரும்பாலான செயல்முறைகள் டிஜிட்டல் முறையில் செய்யப்படுவதால், விண்ணப்பிக்கும் முறையும் எளிதாகிவிட்டது. மத்திய அரசின் “சாரதி பரிவஹன்” என்ற வெப்சைட்டுக்கு சென்று, உங்கள் மாநிலத்தைத் தேர்ந்தெடுத்து ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம். அங்கு உங்கள் பெயர், முகவரி, பிறந்த தேதி போன்ற விவரங்களை அளிக்க வேண்டும்.

ஒருவேளை உங்கள் டிரைவிங் லைசென்ஸ் தொலைந்து போனால் இனி கவலைப்படத் தேவையில்லை. அதையும் சாரதி பரிவாஹன் இணைய தளத்தில் எளிமையாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *