சூட்டிங்கில் மதுவால் வந்த வினைரஜினிக்கு பாடம் எடுத்த பாலச்சந்தர்

q7tvnews@gmail.com
2 Min Read

இந்தக் கடுமையான வார்த்தைகள் என் மனதை ஆழமாகத் தைத்தன. அன்றிலிருந்து இன்று வரை ஜம்மு-காஷ்மீர் என எவ்வளவு குளிரான இடங்களுக்குப் படப்பிடிப்புக்குச் சென்றாலும், மேக்கப் போட்டிருக்கும் போது மது அருந்துவதில்லை என்ற உறுதியை எடுத்ததாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இன்றைக்கும் இளம் நடிகர்களுக்கு போட்டியாக படம் நடித்து வரும் நடிகர் ரஜினிகாந்த் கே.பாலச்சந்தர் படத்தில் அறிமுகமாகி இருந்தாலும், அவர் செய்த ஒரு தவறுக்காக பாலச்சந்தர் தனி அறையில் அழைத்து சென்று கடுமையாக திட்டியுள்ளார் என்று ரஜினிகாந்தே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

1975-ம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் என்ற படத்தில் அறிமுகமானர் ரஜினிகாந்த். கே.பாலச்சந்தர் இயக்கிய இந்த படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீவித்யா நடித்திருந்தனர். இந்த படம் பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து கே.பாலச்சந்தர் இயக்கிய அடுத்தடுத்த படங்களில் ரஜனிகாந்த் நடிக்க தொடங்கினார். அந்த வகையில், 1978-ம் ஆண்டு வெளியான படம் தப்பு தாளங்கள். ஒரே நேரத்தில் தமிழ், கன்னடா என இரு மொழிகளில் வெளியான இந்த படத்தில் ரஜினிகாந்த் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

இந்த படத்தின் படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் குறித்து பகிர்ந்துகொண்ட ரஜினிகாந்த், கன்னடத்தில் ‘தப்பித தாளா’ திரைப்படப் படப்பிடிப்பின் போது நடந்த சம்பவம் இது. 1977-78 காலகட்டத்தில், ஒருநாள் இரவு 7 அல்லது 8 மணிக்கு படப்பிடிப்பு முடிந்து ரஜினி அவர் அறைக்கு சென்றுவிட்டேன். ஷூட்டிங் முடிந்துவிட்டது என்பதால், மது அருந்திவிட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, இரவு 10 மணியளவில் பாலசந்தரின் உதவி இயக்குநர் அமீர்ஜான் வந்து, “சார் உங்களை அழைக்கிறார்” என்று ரஜினியிடம் சொன்னார்.

மது அருந்தியிருந்த நிலையில் சாரின் முன்னால் எப்படிப் போவது என்று தெரியாமல், அவசரமாகக் குளித்துவிட்டு, வாயில் ஸ்ப்ரே அடித்துக்கொண்டு ரஜினிகாந்த் அங்கு சென்றார். பாலச்சந்தர் சார் அருகில் செல்லாமல் தள்ளியே நின்றாலும், அவருக்கு விஷயம் தெரிந்துவிட்டது. அதன்பிறகு தன்னை தனியாக ஓர் அறைக்கு அழைத்துச் சென்ற பாலசந்தர் லெஃப்ட் ரைட் வாங்கி விட்டார் என ரஜினிகாந்த் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *