ராஜ்யசபா எம்.பி‌.யாகும் த்ரிஷாடெல்லி தவெக குரல் இவர்தான்

q7tvnews@gmail.com
2 Min Read

தவெக சார்பாக நடிகை திரிஷா ராஜ்ய சபா எம்பியாக தேர்வு செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. டெல்லியில் தவெக சார்பாக பேச்சுவார்த்தை நடத்த நம்பிக்கைக்குரிய நபராக திரிஷா இருப்பார் என்று சொல்லப்படுகிறது. இதற்கு திரிஷாவின் சமூக பின்னணியும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

தவெக தரப்பில் டெல்லியிலும் காய்களை நகர்த்த திட்டமிட்டு வருகிறது. லோக்சபா தேர்தல் 2029ல் நடப்பதால், அதுவரை மக்களவைக்குள் தவெக செல்ல வாய்ப்புகள் கிடையாது. ஆனால் ராஜ்ய சபாவில் தவெக தரப்பில் ஒரு உறுப்பினரையாவது கொண்டு செல்ல வேண்டும் என்று முனைப்பு காட்டி வருகிறது.

ஏற்கனவே அதிமுக சார்பாக மயிலம் தொகுதியில் வென்ற சிவி சண்முகம் ராஜ்ய சபா பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதிமுகவில் இப்போது பிளவு ஏற்பட்டுள்ள சூழலில், மீண்டும் அதிமுக சார்பாக ராஜ்ய சபா எம்பி தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் குறைவு என்று பார்க்கப்படுகிறது. இதனால் தவெக தரப்பில் ஒரு ராஜ்ய சபா எம்பியை அனுப்ப திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

ஒரு ராஜ்ய சபா உறுப்பினரை தேர்வு செய்ய 34 எம்எல்ஏ-க்கள் வாக்களிக்க வேண்டும். இதனால் தவெக சார்பாக நடிகை திரிஷா ராஜ்ய சபா எம்பியாக தேர்வு செய்யப்படலாம் என்று சில தகவல் வெளியாகி இருக்கிறது. வழக்கமாக மாநிலத்தில் எந்தக் கட்சி ஆட்சி அமைத்தாலும், டெல்லியில் தங்கள் சார்பாக பேச்சுவார்த்தை நடத்த ஒரு பிரிவை உருவாக்கும்.

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு முரசொலி மாறன் இருந்தார். அதேபோல் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர்-க்கு ஜெயலலிதா இருந்தார்.

அந்த வகையில் விஜய்க்கு நம்பிக்கையாக நடிகை திரிஷா இருந்து வருகிறார். இதனால் தவெக தரப்பில் நடிகை திரிஷா ராஜ்ய சபாவுக்கு அனுப்பி வைக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

டெல்லிக்கு தனக்கு நம்பிக்கையாக இருக்கும் திரிஷாவை அனுப்ப விஜய் திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. நடிகை திரிஷாவும் புதிய படங்களை கமிட் செய்து கொள்ளவில்லை. இதனால் விரைவில் திரிஷாவின் அரசியல் என்ட்ரி இருக்கும் என்று கருதப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *