
தவெக தரப்பில் இருந்து 10 அமைச்சர் பதவி தருவதாக பேரம் பேசப்பட்டதாக அதிமுக எம்எல்ஏ கேசி வீரமணி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக மீது குதிரை பேர குற்றச்சாட்டு எழுந்திருக்கும் சூழலில், எஸ்பி வேலுமணி தரப்பு ஆதரவு எம்எல்ஏ கேசி வீரமணி பேசி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இவ்வளவு தூரம் தேர்தலுக்கு செலவு செய்து பயன் இல்லாமல் போய்விடக் கூடாது. கட்சியில் 4 பேராவது பயன் அடையட்டும் என்று தவெக அரசுக்கு ஆதரவு அளிக்க முடிவு எடுத்தோம். உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெற முடியும் என கேசி வீரமணி தெரிவித்துள்ளார்
அடுத்த தேர்தலிலும் கூட்டணி அமைக்க முடியும் என்பதற்காகவும் ஆதரவு கொடுத்தோம். இதனால் அதிமுக நிர்வாகிகள் என் மீது என்ன குற்றம் சுமத்தினாலும் ஏற்கிறேன். விஜய்க்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவிக்கலாம் என்று சொன்னது எடுபடவில்லை. தவெக தரப்பில் 10 அமைச்சர் பதவி தருவதாக கூறினார்கள் என கேசி வீரமணி தெரிவித்துள்ளார்
தவெக மீது எடப்பாடி பழனிசாமி குதிரை பேரக் குற்றச்சாட்டை முன் வைத்து வருகிறார். இப்படியான சூழலில் தவெகவில் இருந்து 10 பேருக்கு அமைச்சர் பதவி கொடுப்பதாக பேசினார்கள் என்று கேசி வீரமணி போட்டு உடைத்துள்ளார். இதனால் தூய சக்தி என்று சொல்லிக் கொள்ளும் தவெக மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.


