
சென்னை ஆழ்வார்பேட்டையில் மு.க.ஸ்டாலினின் இல்லத்திற்கு நேரில் சென்ற நடிகர் ரஜினிகாந்த் அவரைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது, தேர்தலில் வெற்றிபெறும் நேரத்தில் மட்டுமல்ல, இக்கட்டான சூழலிலும் உடன் இருப்பேன் என மு.க. ஸ்டாலினுக்குத் தனது ஆதரவைத் தெரிவிப்பதாகவும், அவருக்குத் துணையாக இருப்பேன் என்றும் நடிகர் ரஜினிகாந்த் உறுதியளித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுமார் 20 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பு, மரியாதை நிமித்தமான வருகை மட்டுமல்லாது, தற்போதைய அரசியல் சூழலில் மு.க. ஸ்டாலினுக்கு ஆறுதல் கூறும் ஒரு செயலாகவும் கருதப்பட்டது. மேலும் இந்தச் சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களைப் பெற்று வெற்றி பெற்றுள்ள நிலையில், நீண்ட கால நண்பர் என்ற அடிப்படையில் மு.க. ஸ்டாலினை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்துப் பேசியுள்ளதும் மக்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் திமுக ஆதரவில் அதிமுக ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தை நடந்ததாக நேற்று முதல் தகவல் பரவி வருகிறது. இந்த பரம எதிரிகளாக இருக்கும் இரண்டு திராவிட கட்சிகளையும் இணைக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு பாலமாக செயல்பட்டாரா என இணையத்தில் மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றனர். பரம எதிரிகளாக இருக்கும் இரண்டு திராவிட கட்சிகளையும் இணைக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு பாலமாக செயல்பட்டாரா என இணையத்தில் மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன.காரணம் ரஜினி ஸ்டாலின் சந்திப்புக்கு சில மணி நேரங்கள் கழித்துதான் திமுக ஆதரவில் அதிமுக ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தை நடந்ததாக தகவல் பரவி வருகிறது. இருப்பினும் இந்த செய்தி எழுதப்பட்ட நேரம் வரை. அதாவது மே ஏழாம் தேதி காலை 7 மணி வரை, ரஜினிகாந்த் தரப்பில் இருந்து இதுகுறித்து எந்த ஒரு மறுப்பு செய்தியும் வரவில்லை.
ஆனால் சமூக வலைதளங்களில் மட்டும் திமுகவும் அதிமுகவும் சேர்ந்தால் நன்றாக இருக்கும் என ஐடியா கொடுத்து இருப்பாரோ என மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன.


