
லெபனான் அதிபர் ஜோசப் அவுன் மற்றும் பிரதமர் நவாஃப் சலாம் ஆகியோர் இஸ்ரேலுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த முயலும் நிலையில், குண்டுவீச்சுகளுக்கு மத்தியில் பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்தப் பயனும் இல்லை என ஹிஸ்புல்லாவின் கூட்டாளியான லெபனான் நாடாளுமன்ற சபாநாயகர் நபி பெர்ரி (Nabih Berri) கடுமையாகச் சாடியுள்ளார்!
இஸ்ரேல் நகரங்களை அழிப்பதும், வீடுகளை இடிப்பதும் இன்னும் நிற்கவில்லை என அவர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்களின் ரத்தம் கொடூரமாகச் சிந்தப்படுவதை இஸ்ரேல் இன்னும் நிறுத்தவில்லையே என அவர் அப்பட்டமான கேள்வியை முன்வைத்துள்ளார்.
காயமடைந்தவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவும், இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களை மீட்கவும் செல்லும் ஆம்புலன்ஸ் குழுவினரை இஸ்ரேலியப் படைகள் தடுத்து நிறுத்துவதாக ‘அஷர்க் அல்-அவ்சத்’ நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.
தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கும்போது எதிரியுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துவதில் தனக்கு உடன்பாடு இல்லை என அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.


