அமெரிக்கா ஒருபுறம் ஈரானின் எண்ணெய் கப்பல்களைத் தடுத்து நிறுத்திப் பொருளாதாரத்தை முடக்கும் நிலையில், ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியைத் தனது சொந்தச் ‘சுங்கச்சாவடியாக’ மாற்றி, அதில் பயணிக்கும் கப்பல்களிடம் இருந்து வசூலித்த முதல் சுங்கவரி வருமானத்தை மத்திய வங்கியில் வரவு வைத்துள்ள மாபெரும் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டு உலகை அதிரவைத்துள்ளது!
ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் பயணித்த கப்பல்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட முதல் ‘சுங்கவரி’ (transit toll) வருமானம், ஈரானிய மத்திய வங்கி கணக்கில் (Central Bank account) வெற்றிகரமாக வரவு வைக்கப்பட்டுள்ளதாக ஈரானிய நாடாளுமன்ற துணை சபாநாயகர் ஹமீத் ரெசா ஹாஜி பாபாயி (Hamid Reza Haji Babaei) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
“எங்கள் மீது யார் பொருளாதாரத் தடைகளை (sanctions) விதிக்க முயற்சிக்கிறார்களோ, அவர்களை நாங்களும் முடக்குவோம்” என அவர் அமெரிக்காவிற்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் மாபெரும் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“உலகின் பெருமளவிலான எண்ணெய், எரிவாயு மற்றும் ஐரோப்பாவிற்கான அத்தியாவசியப் பொருட்கள் (essential goods for Europe) அனைத்தும் இப்போது முழுமையாக எங்களின் கட்டுப்பாட்டில்தான் (under our control) உள்ளன” என ஃபார்ஸ் (Fars) செய்தி நிறுவனத்திடம் அவர் வெளிப்படையாக மார்தட்டியுள்ளார்.
உலக எண்ணெய் விநியோகத்தில் 20% செல்லும் இந்தப் பாதையை 7 வாரங்களாக முடக்கியுள்ள ஈரான், ‘நட்பு நாடுகளின்’ (friendly) கப்பல்களை மட்டுமே அனுமதிக்கிறது. ஒவ்வொரு கப்பலும் கொண்டு செல்லும் சரக்கு மற்றும் ஆபத்தின் அளவைப் பொறுத்து (cargo and level of risk) இந்தக் கட்டணம் மாறுபடும் என்றும், அந்தப் பணம் ஒருங்கிணைந்த கருவூலத்தில் (treasury) சேர்க்கப்படுவதாகவும் மூத்த எம்.பி அலிரேசா சலிமி (Alireza Salimi) அதிரடியாகக் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் மாபெரும் கடல் முற்றுகையால் திவாலாகிக் கொண்டிருந்த ஈரான், இப்போது உலக நாடுகளின் கப்பல்களிடம் ‘கப்பம்’ வசூலிக்கத் தொடங்கியுள்ளது. “எங்கள் கடல்வழியில் வந்தால் காசு கொடு, இல்லையென்றால் கப்பல் சுடப்படும்” என்ற ஈரானின் இந்த உச்சக்கட்ட துணிச்சலால் உலகப் பொருளாதாரம் மாபெரும் பேரழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது!



