இந்தியாவை இழிவுபடுத்திய டிரம்ப்வாய்மூடி மெளனம் காக்கும் 56 இன்ச்

q7tvnews@gmail.com
1 Min Read

இந்தியாவை அவமானப்படுத்தும் வகையில் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த பதிவு சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதனால் இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவில் மீண்டும் பிரச்சனை வரும் நிலை உருவாகி உள்ளது.

இந்தியாவை போன்ற நல்ல நட்பு நாடு எதுவுமில்லை. பிரதமர் மோடி போல் நல்ல நண்பர்” என புகழும் டிரம்ப் அதன்பிறகு நம் நாட்டை சீண்டும் வகையில் கருத்து தெரிவித்து வருவதை நாம் இதற்கு முன்பு பலமுறை பார்த்து இருப்போம். அந்த வகையில் தற்போது டொனால்ட் டிரம்ப் மீண்டும் நம் நாட்டை அவமானப்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ளார்.

அதாவது பிற நாட்டில் கருவுற்ற பெண் ஒருவர் அவரது மகப்பேறு காலத்தில் 9வது மாதம் அமெரிக்காவில் நுழைவதாகவும், பிறகு இந்தியா அல்லது சீனா மற்றும் பூமியின் பிற நரக குழியில் இருந்து குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகி விடுவதாகவும் டிரம்ப் ஒரு கருத்தை பகிர்ந்துள்ளார்

டொனால்ட் டிரம்ப்-இன் இந்தப் பதிவிற்குப் பிறகு, எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி இதற்குத் கடுமையான எதிர்வினையை ஆற்றியுள்ளது.

காங்கிரஸ் தனது எக்ஸ் தளத்தில், “அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவை ‘நரகம்’ என்று கூறியுள்ளார். இந்தக் கருத்து மிகவும் அவமதிப்புக்குரியது மற்றும் இந்தியாவிற்கு எதிரானது. இது ஒவ்வொரு இந்தியரையும் புண்படுத்தியுள்ளது” என்று பதிவிட்டுள்ளது

பிரதமர் நரேந்திர மோதி இது குறித்து அமெரிக்க அதிபருடன் பேச வேண்டும் மற்றும் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

ஆனால் வாயைத் திறந்தாலே தேசப் பற்று முழக்கம் போடும் பாஜக தரப்பில் இதுவரை எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *