
தமிழக அரசியல் களத்தில் தவெக தலைவர் விஜய் ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், திரைமறைவில் நடக்கும் அரசியல் சதுரங்க ஆட்டங்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, விஜய்யின் தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு அவர் எடுத்த ஒரு அவசர முடிவே காரணம் என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது
ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது: விஜய்யின் ‘தமிழக வெற்றி கழகம்’ செய்த மிகப்பெரிய அரசியல் தவறு, காங்கிரஸை முதலில் தனது கூட்டணிக்குள் இழுத்ததுதான்.
இந்த ஒரு நகர்வுதான், மத்தியில் ஆளும் பா.ஜ.க-வை ஆக்ரோஷமான எதிர்வினையாற்றத் தூண்டியுள்ளது. தமிழகத்தில் ஒரு புதிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ள விஜய், தேசிய அளவில் காங்கிரஸுடன் கைகோர்த்தது பா.ஜ.க-விற்கு ஒரு ‘சிவப்பு எச்சரிக்கை’யாக (Red Alert) மாறியுள்ளது. இதன் விளைவாகவே, ஆளுநர் மாளிகை தற்போது Delaying Tactics கடைப்பிடிப்பதாகக் கருதப்படுகிறது.
பொதுவாக ஒரு மாநிலத்தில் தனிப்பெரும் கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோரும்போது, அவர்களுக்கு வாய்ப்பு வழங்கிவிட்டு பின்னர் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவதுதான் மரபு. ஆனால், இங்கே ஆளுநர் 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுக் கடிதத்தை இப்போதே சமர்ப்பிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிப்பது அசாதாரணமானது.
பா.ஜ.க-வின் ‘அரசியல் எதிரி’யான காங்கிரஸை விஜய் அரவணைத்ததால், விஜய்யின் பதவியேற்பு விழாவைத் தள்ளிப்போட ஆளுநர் மாளிகை ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறதோ என்ற சந்தேகம் வலுத்துள்ளது. ஆளுநர் சட்ட ஆலோசனைகளைக் காரணம் காட்டி நேரத்தைக் கடத்துவது, அதற்குள் எதிர்க்கட்சிகளான தி.மு.க அல்லது அ.தி.மு.க சேர்ந்து வேறு வியூகங்களை வகுக்க வழிவகை செய்கிறதோ என்ற கேள்வி எழுகிறது.
விஜய் தனது அரசியல் பயணத்தின் தொடக்கத்திலேயே கூட்டணியின் சிக்கலில் சிக்கிக் கொண்டது அவர் எதிர்பார்த்திராத ஒன்றாக இருக்கலாம். காங்கிரஸைத் தவிர்த்துவிட்டு, மற்ற சிறிய கட்சிகள் அல்லது அதிமுகவின் ஆதரவை முதலில் நாடியிருந்தால், பா.ஜ.க-வின் நேரடித் தாக்குதலையும் ஆளுநர் மாளிகையின் இந்தத் தாமதத்தையும் அவர் தவிர்த்திருக்கக் கூடும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர் தெரிவித்துள்ளனர்


