
வெளிநாடுகளில் வேலைக்கு செல்பவர்கள் கை நிறைய சம்பளம், குறைந்த நேரம் வேலை, தேவையான அளவு விடுப்பு என அனைத்தும் கிடைக்கும் என்ற கனவில் தான் செல்கின்றனர். ஆனால், எல்லா நாடுகளும் நாம் நினைப்பது போல் இல்லை. சில நாடுகளில் அதிகமக உழைக்க வேண்டிய தேவை இருக்கிறது. அது எந்தெந்த நாடுகள் என்பது குறித்து பார்க்கலாம்.
உலகில் அதிக பணி நேரம் கொண்ட நாடுகள் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்கு பணியாற்றுபவர்கள் சராசரியாக வாரத்திற்கு 50.9 மணி நேரம் வேலை செய்கிறார்கள். அமீரகத்தில் வேலை செய்பவர்களில் சுமார் 39% பேர் வாரத்திற்கு 49 மணி நேரம் அல்லது அதற்கு மேலாக உழைக்கின்றனர். அங்கு நிலவும் கடுமையான போட்டி நிறைந்த வேலை வாய்ப்புச் சந்தையும் உற்பத்தித் திறனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கலாச்சாரமுமே இந்த அதிக வேலை நேரத்திற்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது
கத்தார் நாட்டில் பணிபுரிபவர்கள் வாரத்திற்குச் சராசரியாக 48 மணி நேரம் வேலை செய்கிறார்கள். இங்குள்ள தொழிலாளர்களில் 29% பேர் வாரத்திற்கு 49 மணி நேரம் அல்லது அதற்கும் மேலாக உழைக்கின்றனர். கத்தாரின் அதிவேகப் பொருளாதார வளர்ச்சியே இந்த அதிக வேலை நேரத்திற்குக் காரணமாகும். அந்நாடு பெருமளவில் புலம்பெயர் தொழிலாளர்களை நம்பியிருப்பது, இந்தப் பணி முறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இது ஒரு புறம் இருக்க தற்போதைய போர் சூழல் காரணமாக அரபு நாடுகளுக்கு வேலைக்கு செல்வது மிகவும் சவாலான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதிக ஊதியம் கொடுத்தாலும் முன்பை விட மிக அதிகமாக தொழிலாளர்கள் உழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் போர் சூழல் மிகுந்த அரபு நாடுகளில் வேலைக்கு சென்றால் உயிரோடு திரும்ப முடியுமா என்பது தான் பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வரும் காலங்களில் வளைகுடா நாடுகளில் வேலைக்கு செல்லும் பிற நாட்டவர்களின் ஆர்வம் மெல்ல மெல்ல குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


