
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய், தனது அரசியல் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னதாக நடித்த கடைசித் திரைப்படம் ‘ஜனநாயகன்’. எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம், முதலில் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அரசியலுக்கு முன்பு வெளியாகும் கடைசி படம் என்பதால் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்தது. ஆனால் சென்சார் பிரச்சனையால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் ஜனநாயகன் திரைப்படம் வரும் மே 8ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகிறது. இது விஜய் ரசிகர்களுக்கு மிகப் பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான போஸ்டர்களை விஜய் ரசிகர்கள் ஷேர் செய்து டிரெண்டாக்கி வருகிறார்கள். இருப்பினும் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் (KVN) புரொடக்ஷன்ஸ் இதுவரை ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பதால் இதில் தெளிவு இல்லை.
முன்னதாக, 2026 பொங்கல் பண்டிகைக்கே இந்தப் படம் வெளியாகி இருந்தால் அது பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றிருக்கும். சுமார் ₹100 கோடிக்கும் அதிகமான முன்பதிவு மட்டும் நடந்திருந்தது. இப்போது படம் சம்மரில் வெளியாவது நல்ல விஷயம் என்றாலும் அதே அளவுக்கு வசூல் சாதனை படைக்குமா என்பது கேள்வியாகவே இருக்கிறது.


