நடிகைகள் திரிஷா மற்றும் ரம்யா கிருஷ்ணன் இடையேயான நட்பு ரசிகர்களுக்கு தெரிந்த ஒன்று. பல வருடங்களாக நல்ல தோழிகளாக இருந்து வரும் நிலையில் திரிஷா பற்றி ரம்யா கிருஷ்ணன் பேசிய பழைய வீடியோ தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி பேசுபொருளாகியுள்ளது.
இந்த வீடியோவில், ஒரு டிவி நிகழ்ச்சியில் ரம்யா கிருஷ்ணன் திரிஷாவைப் பற்றி மிகவும் காமெடியாகவும், ஓபனாகவே பேசியிருப்பது தான் இப்போது வைரலாகும் காரணம். அந்த வீடியோவை சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்திருந்தார். அதை பார்த்த திரிஷாவும் அதையே ரீஷேர் செய்ததால் ரசிகர்கள் கவனம் முழுவதும் அந்த வீடியோ மீது திரும்பியுள்ளது.
அந்த பேட்டியில் ரம்யா கிருஷ்ணன் பேசும்போது, “திரிஷா பேச ஆரம்பிச்சா நிறுத்தவே மாட்டாங்க… பேசிக்கிட்டே இருப்பாங்க. அதே மாதிரி, அவங்களுக்கு எப்போ வேண்டுமானாலும் கண்ணீர் வரவைக்க முடியும். அப்படி அழுதுகிட்டு பலரையும் ஏமாத்தியிருக்காங்க!” என்று சிரித்துக்கொண்டே சொல்கிறார்.
அதற்க்கு பக்கத்துல இருந்த திரிஷா உடனே ரியாக்ட் பண்ணுறாங்க, “நான் அழும்போது ரம்யா மட்டும் தான் சிரிப்பாங்க… நான் ரொம்ப ஃபீலிங்கோட பேசினாலும் ‘இதெல்லாம் ஃபீலிங் கிடையாது… டிராமா!’ன்னு சொல்லி கலாய்ப்பாங்க!” என்று சிரித்தபடியே சொல்லுகிறார். இருவருக்கும் நடுவில் நடந்த இந்த லைட்-ஹார்ட்டான கலாய்ப்பு தான் ரசிகர்களுக்கு ரொம்ப ரியலாக இருக்கிறது.


