ஜிப்பா, தொப்பியுடன் பள்ளிவாசலில் KGF வில்லன் கருடன்!

KGF பாகம் ஒன்றில் நடித்து, உலகக் புகழ்பெற்றவர் வில்லன் நடிகர் ராமச்சந்திர ராஜு. கருடன் என்ற இவரது கேரக்டரின் பெயராலேயே ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். இந்த நிலையில், இவர் பள்ளிவாசல் ஒன்றிற்கு தொப்பி, ஜிப்பாவுடன் சென்ற நிலையில், அங்குள்ள இமாம், இவருக்கு இஸ்லாமியர்கள் அணியும் தலைப்பாகையை அணிந்து விடுகிறார். இந்த வீடியோக்களை பதிவிட்ட சிலர், நடிகர் கருடன், இஸ்லாத்தை தழுவி விட்டதாக கூறி, பரப்பி வருகின்றனர்.எனினும் இதுகுறித்து உண்மையைக் கண்டறியும் ஊடகக் குழுவினர் நடத்திய ஆய்விலும் தெளிவான முடிவுக்கு வர முடியவில்லை. அதாவது, அவர் இஸ்லாத்தை தழுவினார் என்பதை உறுதிபடுத்தவோ, அல்லது நிராகரிக்கவோ முடியவில்லை என நவ் பாரத் டைம்ஸ் கூறுகிறது.
எனினும் நடிகர் கருடன் கடந்த பல வருடங்களாகவே பள்ளிவாசல்களுக்கு சென்று வருகிறார். கர்நாடகவை பூர்வீமாக கொண்ட இவர், கேஜிஎஸ் ஹீரோ யாஷ்ஷின் 15 ஆண்டு கால நெருங்கிய நண்பர் ஆவார்.
இவரு இண்ஸ்டகிராம் பக்கத்திலும், இதுகுறித்து அவர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. எனவே இதுகுறித்து அவர் அறிவித்தால் மட்டுமே உண்மை என்ன என்று தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருடன் படம் மூலம் புகழ்பெற்ற ராமச்சந்திர ராஜு, தமிழில் சுல்தான், கோடியில் ஒருவன், அரண்மனை சீரியஸ், யானை உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.