ரஜினிக்கு கார் ஓட்டிய யூசுப் அலி! இந்திய கோடீஸ்வரரின் எளிமை!

துபாயில் மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ள யூசுப் அலி, தனது நண்பரான தென்னிந்திய சூப்பர் ஸ்டாரை ரோல்ஸ் ராய்ஸ் காரில் கூட்டிக்கொண்டு சுற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.ஞானவேல் ராஜா இயக்கத்தில் தனது 170வது படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.வேட்டையன் என பெயரிடப்பட்ட அந்த படத்தில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன், பகத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் பட்டப்படிப்பை முடித்து விட்டு துபாயில் உள்ள தனது நண்பர்களுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார் நடிகர் ரஜினிகாந்த்.இந்நிலையில் திங்கள் அன்று தனது நண்பரான லூலூ அதிபர் யூசுப் அலியை சந்தித்தார் ரஜினிகாந்த்.அபுதாபியில் உள்ள யூசுப் அலியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.இச்சந்திப்பின்போது யூசுப் அலி தனது ரோல்ஸ் ராய்ஸ் காரில் ரஜினிகாந்தை அழைத்துக்கொண்டு அபுதாபியை சுற்றிவரும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.லூலு குழுமத்தின் ஊழியர் ஒருவர் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில் ஸ்டைலிஸ் லுக்கில் காணப்படுகிறார் சூப்பர் ஸ்டார்.
தனது நண்பருக்காக காரை ஓட்டிச்செல்லும் யூசுப் அலி, அபுதாபி சாலைகளில் தனது நண்பருடன் வளம் வருகிறார்.முன்னதாக கடந்த வாரம் லுலு குழுமத்தின் COO சைஃபி ரூபாவாலாவை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார்.அச்சந்திப்பு குறித்து சமூக வலைதளத்தில் சைஃபி கூறும்போது “இந்தியாவின் ஒரே சூப்பர் ஸ்டாரான தலைவருடன் இணையும் வாய்ப்பு கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்திருந்தார்.இச்சந்திப்பு எதற்காக நடந்தது என்பன குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ரஜினியின் தரப்பிலிருந்து வெளியாகவில்லை.இதேபோல இவ்வருட தொடக்கத்தில் சென்னையில் உள்ள ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் யூசுப் அலி சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது.