உறங்கும் செல்லும் முன் தலையை துணியால் மூடிக்கொள்ளும் யூசுப் அலி! வெற்றியின் ரகசியம்?

தொழிலதிபர் யூசுப் அலி இன்று வரை பின்பற்றும் பழக்கங்கள்…
தாய், தந்தையிடம் கற்ற ரகசியங்கள்…
இந்திய பெரும் தொழில் அதிபர்களில் ஒருவர் லூலூ மாலின் உரிமையாளர் யூசுப் அலி. வழக்கமான பணக்காரர்களை போல் அல்லாமல், சற்று மாறுபட்டவர். குறிப்பாக வாரி வாரி வழங்குவதில் வல்லவர். தனது வெற்றிக்கு என்ன காரணம் என்பது குறித்து, அவர் விளக்கியுள்ளார். அந்த சுவாரஸ்யத் தகவல்களை காணலாம்.
யூசுப் அலியின் குடும்பம் பாரம்பரிய வர்த்தக பின்னணியை கொண்டது. யூசுப் அலி, துபாய்க்கு தொழில் வாய்ப்புகளை தேடிச் சென்ற போது, அவருக்கு 5 ரூபாய் பரிசு கொடுத்து, அவரது தாத்தா வாழ்த்தி வழியனுப்பி இருக்கிறார்.
அவரது தாத்தா தனது பேரனுக்கு சொன்ன அறிவுரை என்ன தெரியுமா? நீ தொழிலில் பெரிய ஆள் ஆன பிறகு, ஒரு போதும் உனது தொழுகையை விட்டு விடாதே. நேர்மையாக இரு… கடமை உணர்வோடு இரு….
சம்பாதித்த பணத்தை நீயே அனுபவிக்க வேண்டும் என்று நினைக்காதே… வாரி வாரி தானம் செய்… கடுமையாக உழைத்துக் கொண்டே இரு… நானும், உனது பாட்டியும் உனக்காக தொடர்ந்து பிராத்தனை செய்வோம் என்பது தான். இந்த வார்த்தைகள் தனது வாழ்க்கையின் ஒளியாக இருப்பதாக யூசுப் அலி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனது தந்தையிடம் உள்ள ஒரு பழக்கத்தை இன்று வரை தான் பின்பற்றுவதாக யூசுப் அலி குறிப்பிட்டுள்ளார். அதாவது, வரவு செலவு கணக்குகளை தனி டைரி ஒன்றில் எழுதி வைக்கும் பழக்கத்தை யூசுப் அலியின் தந்தை அப்துல்காதர் ஹாஜி வைத்திருந்தார். அந்த பழக்கத்தை இன்று வரை பின்பற்றி வருவதாக யூசுப் அலி கூறியுள்ளார். ஆனால் டைரி தாங்கமா என்பது தான் கேள்வி.
அடுத்ததாக தனது தயாரின் நினைவாக ஒரு பழக்கத்தை இன்று வரை பின்பற்றி வருவதாக குறிப்பிட்டுள்ளார் யூசுப் அலி. தனது தாயார் சபியா, உறங்கச் செல்லும் முன், தனது தலைமுடியை நன்றாக துணியால் மூடி, கட்டிவிட்டு உறங்கச் செல்வாராம். அவரது தாயாரின் நினைவாக, தானும் உறங்கச் செல்லும் முன், தலைமுடியை துணியால் மறைத்து, கட்டிவிட்டுத் தான் உறங்குவாராம்…
யூசுப் அலியின் தாய் தந்தை இருவரும் 2001 ஆம் ஆண்டு அமீரகத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்தனர். கோடி கோடியாய் பணம் இருந்தும், அந்த சோகம் இன்று வரை அவரை வாட்டி வருகிறது…
யூசுப் அலியின் தனிப்பட்ட சொத்து மதிப்பு 75 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். லூலூ நிறுவனத்தின் மொத்த மதிப்பு இதைவிட பல மடங்கு அதிகம்.
===