ஆண்களை வாடகைக்கு எடுக்கும் பெண்கள்…!

வெளிநாடுகளில் வேக, வேகமாக பரவும் சில கலச்சாரம் நமக்கு விநோதமாக தோன்றுகிறது. சீனாவில் தற்போது “ஆண் அம்மா” என்ற கான்செப்ட் பரவி வருகிறது.
சீனாவில் பெரு நகரங்களில் வசிக்கும் இளம் பெண்கள் பரபரப்பான வாழ்க்கை முறையால் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதனால் அவர்கள் யாரையாவது கட்டிப்பிடித்து ஆசுவாசப்படுத்திக்கொள்ள விரும்புகிறார்கள். சீனாவில் இருக்கும் இளம் பெண்கள் பெரும்பாலும் கல்யாணத்தை தங்களது முன்னேற்றத்திற்கான தடையாக கருதுகிறார்கள்.
இதனால் வேலை மற்றும் வாழ்க்கை முறையில் ஏற்படும் அழுத்தத்தை ஷேர் செய்து கொள்ள அவர்களுக்கு ஒரு அம்மா தேவைப்படுவதால், தற்போது ஆண் அம்மா என்ற முறை வைரலாகி வருகிறது.
ஆரம்பத்தில் ஜிம் சென்று திடகாத்திரமாக இருந்த ஆண்களுக்கு அதிக டிமாண்ட் இருந்த நிலையில், தற்போது பெண்களைப் போல இலகுவான உடல் வாகு கொண்ட நார்மல் ஆண்களைத் தான் சீன பெண்களுக்கு அதிகம் பிடிக்கிறதாம்.
தனிப்பட்ட ஆப் அல்லது சோசியல் மீடியா மூலமாக ஆண் அம்மாவை கண்டுபிடிக்கும் இளம் பெண்கள் அவர்களை சப் வே அல்லது ஷாப்பிங் மால்களில் வைத்து 5 நிமிடம் கட்டிப்பிடிக்கிறார்கள்.
இதன் மூலம் அவர்களது மன அழுத்தம், கவலை குறைகிறது. இதற்காக 250 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை அந்த ஆண்கள் கட்டணமாக வசூலிக்கிறார்கள். அதிக பணிச்சுமை மற்றும் ரெகுலராக ஓவர் டைம் செய்யும் பெண்கள் தனக்கு தினமும் தேவை என்பதற்காக ஆண் அம்மாவை நிரந்தரமாகவே வேலைக்கும் வைத்துள்ளார்கள்.
இது பார்க்க விநோதமாக தோன்றினாலும், மன அழுத்தத்தைக் குறைக்கும் மருத்துவமாகவே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.