யார் இந்த ரின்சன் ஜோஸ்?

லெபனானில் இஸ்ரேல் நடத்திய பேஜர் பயங்கர வாதத் தாக்குதலில், தொடர்புடையதாக கூறப்பட்டு வந்த கேரள இளைஞர் அமெரிக்காவில் தலைமறைவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நல்லவர் போல் நடித்து, நண்பர்கள், குடும்பத்தினரை அவர் ஏமாற்றி வந்ததும் அம்பலமாகியுள்ளது.கேரள மாநிலம் வயநாட்டை பூர்வீகமாகக் கொண்டவர், ரின்சன் ஜோஸ். பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ பட்டம் படித்துள்ளார்.
பிறகு, ஓஸ்லோ பல்கலைக்கழகத்தில் படித்துள்ளார். கடந்த ஆண்டு கனடாவில் ஓணம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் இந்திய தூதரகத்தின் சமூக வலைதளக் கணக்கில் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது அவர் நார்வே குடியுரிமை பெற்று, அந்த நாட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இதனால் அவர் இந்திய குடியுரிமையை இழந்துள்ளதாக தெரிகிறது.
இந்தச் சூழலில் தான் லெபனானில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு உளவு அமைப்புகள் பேஜர்களில் வெடிகுண்டுகளை வைத்து, சர்வதேச பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டன. இதுகுறித்த விசாரணையின் போது, ரின்சன் ஜோசின் பெயர் ஊடகங்களில் அடிபட்டது. இதனையடுத்து, உடனடியாக வெளியுலக உறவுகளை துண்டித்த அவர், அமெரிக்காவிற்கு சென்று தலைமறைவாகியுள்ளார்.ஹங்கேரியைச் சேர்ந்த BAC என்ற நிறுவனம் தான் பேஜர்களை அனுப்பியுள்ளது. இதனிடையே பல்கேரியாவில் ரின்ஸ் ஜோஸ் ஒரு போலி நிறுவனத்தை தனது பெயரில் பதிவு செய்து, இந்த பேஜர் தயாரிப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அதே போல் இஸ்ரேலிலும் ஒரு நிறுவனத்தை அவர் தொடங்கியுள்ளார்.எனினும் பல்கேரியாவிலும் தயாரிப்பில் ஈடுபட்டதற்கான ஆதாரம் இல்லை என அந்நாட்டு விசாரணை அமைப்புகள் தெரிவித்துள்ளன. எனவே அந்த பேஜர்கள் ஹங்கேரியில் உற்பத்தி செய்யப்படவில்லை. எங்கு உற்பத்தி செய்யப்பட்டது எனத் தெரியவில்லை. இதனிடையே BAC நிறுவனத்தின் உரிமையாளரான கிறிஸ்டியானா என்ற பெண்ணும், தற்போது, ரின்ஸ் ஜோசும் தலைமறைவாகியுள்ளனர். இவர்களை சர்வதேச நாடுகளோ, ஊடகங்களோ பயங்கரவாதிகள் என அழைப்பதில்லை என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.