உலகம்

இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல் எப்படி இருக்கும்? அதன் தன்மை என்ன?

கடும் சேதத்தை சந்திக்க போகும் இஸ்ரேல்….
ஈரானின் ராணுவ பலத்தை விவரிக்கும் ஆவணப் படம் வெளியீடு…

இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல் எந்த தன்மையில் இருக்கும் ஈரானின் பலம் என்ன என்பதை விவரிக்கும் ஆணவப்படத்தை லெபனானின் அல் மயாதீன் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. ஈரானின் ஏவுகணைத் தொழில்நுட்பங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் குறித்து அதில் விவரிக்கப்பட்டுள்ளன.

ஈரானின் ஆயுதக் களஞ்சியத்தை பற்றி நன்கு அறிந்து வைத்துள்ள அமெரிக்கா, மற்றும் இஸ்ரேல் படைகள், அவற்றை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் குழப்பத்திலும் அச்சத்திலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காரணம், முழு அளவிலான தாக்குதலை ஈரான் தொடுத்தால், அது மத்திய கிழக்கின் 100 ஆண்டு கால அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என கூறப்பட்டுள்ளது.

அந்த ஆவணப்படும் மேலும் கூறியுள்ளதாவது, அமெரிக்காவின் ஆதரவு மன்னர் ஷாவை எதிர்த்து, புரட்சியை தொடங்கிய ஷியா இளைஞர்கள், 1980ஆம் ஆண்டு வெற்றி பெற்றனர். தங்களது புரட்சியை இஸ்லாமிய புரட்சி என அறிவித்தனர். மன்னர் ஷா நாட்டை விட்டே தப்பி ஓடினார். அந்த மாணவர்களுக்கு தலைமை தாங்கியவர் தான் இமாம் கொமேனி. ஷியா மதத் தலைவரான அவர், ஈரானின் தலைவராக அறிவிக்கப்பட்டார்.

அப்போது இளைஞர்களாக இருந்தவர்கள் தான் தற்போது, ஈரானின் பல துறைகளில் தலைவர்களாக உள்ளனர். அவர்களின் ஒரு முக்கிய இலக்கு, ஈரானை ராணுவ வல்லரசாக உயர்த்த வேண்டும். குறிப்பாக ஏவுகணை தொழில்நுட்பத்தில் உலகின் தலை சிறந்த நாடாக ஈரானை மாற்ற வேண்டும் என்பது தான். அந்த இலக்கில் அவர்கள் தற்போது, வெற்றியடைந்துள்ளனர்.

குறுகிய தூர ஏவுகணைகள் தயாரிப்பில் தொடங்கிய அவர்களது முயற்சி தற்போது, பத்தா ஹைப்பர் சோனிக் ஏவுகணை தயாரிப்பு வரை நீண்டுள்ளது. பத்தா ஹைப்பர் சோனிக் ஏவுகணை என்பது, ஒலியை விட 15 மடங்கு வேகத்தில் சென்று இலக்கை தாக்கக் கூடியது. அதாவது மணிக்கு 18 ஆயிரம் கிலோமீட்டர் வேகம் ஆகும். இதனால் ஏவுகணை தடுப்பு வான் அமைப்புகளால், இந்த ஏவுகணை தடுப்பது சிரமம்.
உலகில் சில நாடுகள் மட்டுமே இந்த வகை ஏவுகணைகளை வைத்துள்ளன.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிப் படை கமாண்டர் காசிம் சுலைமானி அமெரிக்காவால் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் ராணுவ மையத்தை குறிவைத்து, ஈரான் இந்த ராக்கெட்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியது.

கடந்த ஏப்ரல் மாதம் ஆப்ரேசன் டூரு பிராமிஸ் (Operation True Promise) அதாவது, வாக்களிக்கப்பட்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இஸ்ரேல் மீது ஈரான் இந்த ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு பல சம்பவங்களை அந்த ஆணவப்படம் விவரித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button