என்னது இவரு அதானியோட தம்பியா? – ரோட்டில் சாட் விற்பவர் குறித்து வைரலாகும் வீடியோ…!

பிரபலங்கள் என்றாலே சர்ச்சைகள் இருக்கத்தான் செய்யும். அதுவும் இந்த ஏஐ வந்த பிறகு யாராக இருந்தாலும் “10 ஸ்டெப் பேக்ல போ” என்பது போல பயந்து நடுங்க வேண்டியுள்ளது. போதாக்குறைக்கு இந்த நெட்டிசன்களின் அக்கப்போரு வேறு அவ்வப்போது இணையத்தில் பெரும் தலைவலியாக மாறிவிடுகிறது. இப்போ அப்படிப்பட்ட ஒரு வீடியோ ஒன்று தான் வைரலாகி வருகிறது. இந்திய பணக்காரர்களில் ஒருவரான கெளதம் அதானி குறித்த வீடியோ தான் அது.
பார்க்க அச்சு அசலாக பிரபலங்களைப் போலவே இருக்கும் நிறைய நபர்களைப் பார்த்திருப்போம். அப்படிப்பட்டவர்களின் வீடியோ ஓவர் நைட்டில் வைரலாகி விடுவது வழக்கம். தற்போது பார்க்க அச்சு அசலாக கெளதம் அதானி மாதிரியே இருக்கும் நபர் ஒருவர், மும்பையில் உள்ள அந்தேரி ரயில் நிலையத்தில் சாட் விற்பனை செய்யும் வீடியோ தாறுமாறு வைரலாகி வருகிறது. அதைப் பார்த்த நெட்டிசன்களோ அய்யய்யோ… அதானி தம்பிக்கு இப்படியொரு நிலையா?, அண்ணன் கோடீஸ்வரர்… தம்பி இப்படி சாட் வித்து பொழைக்கிறாரே? என இஷ்டத்துக்கு கொளுத்திப்போட்டுவிட்டனர்.
விஷயம் தெரிந்தவர்களோ “இந்தியாவுக்கே கடன் கொடுக்குற அளவுக்கு காசு வைச்சிருக்கவருடா கெளதம் அதானி. அவரு தம்பி ஏன்டா ரோட்டுல சாட் விக்கப்போறான்” என தலையில் அடித்துக் கொண்டு புலம்பி வருகின்றனர். கெளதம் அதானிக்கு இதனால் பெரிசாக எந்த பாதிப்பும் இல்லை என்றாலும், அவரது உருவத்தில் இருக்கும் வீடியோ வைரலானதால் அந்த அப்பாவி சாட் கடைக்காரருக்கு இந்நேரம் வியாபாரம் டபுளாகியிருக்கும் என நம்பலாம்.