விளையாட்டு

200 மடங்கு விலை அதிகம்… விராட் கோலி குடிக்கும் பிளாக் வாட்டரின் ஸ்பெஷாலிட்டி என்ன?

விளையாட்டிற்காக மட்டுமல்ல ஃபிட்னஸிற்காகவும் கிரிக்கெட் வீரர் விராட் கோலி பெயர் பெற்றவர். பிரபலங்களைப் பொறுத்தவரை தங்களது ஃபிட்னஸிற்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்க தயாராக உள்ளனர். அந்த வகையில் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோர் “பிளாக் வாட்டர்”எனப்படும் கருப்பு தண்ணீரை தான் குடிக்கிறார்கள். இந்த தண்ணீரின் விலை சாமானிய மக்கள் வாங்கிப் பருகும் தண்ணீரின் விலையை விட 200 மடங்கு அதிகம். அப்படி இதில் என்ன ஸ்பெஷல் என தெரிந்து கொள்வோம்.

பிரான்ஸ் – சுவிட்சர்லாந்து எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. ஏவியன் லெஸ் பெயின்ஸ் என்ற இடத்தில் உள்ள ஏரியில் இருந்து எடுக்கப்படுகிறது. நேச்சுரல் ஸ்பிரிங் வாட்டர் என்பதால் இதன் நிறம் கருப்பாக இருக்கிறது, அதனால் தான் இதனை பிளாக் வாட்டர் என்று அழைக்கிறார்கள்.

இந்த பிளாக் வாட்டர் உடலுக்குத் தேவையான ரேற்றம் ஆதரவை முழுமையாக தரக்கூடியது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. சரும ஆரோக்கியத்தை பாதுகாப்பது, எடையிழப்பிற்கு உதவுவது, மன அழுத்தத்தைக் குறைப்பது என பல்வேறு நன்மைகள் அடங்கியுள்ளன.

விராட் கோலி இந்த தண்ணீரை பிரான்ஸில் இருந்து இறக்குமதி செய்கிறாராம். ஒரு லிட்டர் பிளாக் வாட்டரின் விலை ரூ.4000 ஆகும். கோஹ்லியைத் தவிர, அனுஷ்கா ஷர்மா, மலைக்கா அரோரா, கரிஷ்மா கபூர், கௌரி கான், பாட்ஷா, டைகர் ஷெராஃப் மற்றும் ஊர்வசி ரவுடேலா உள்ளிட்ட பல பிரபலங்களும் இந்த பிளாக் வாட்டரைத் தன் பருகுகிறார்களாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button