உயிருள்ள பொம்மைகளான பெண்கள்; வைரல் வீடியோவால் வெடித்த சர்ச்சை!

இன்றைய உலகம் வணிக யுகமாகிவிட்டது. போட்டிகள் நிறைந்த மார்க்கெட்டில் பொருட்களை விற்பனை செய்வது என்பது மிகப்பெரிய சவாலாகிவிட்டது. இதனால் வியாரிகளும், கடைக்காரர்களும் வாடிக்கையாளர்களைக் கவர புதுப்புது யுக்திகளைக் கையாண்டு வருகின்றனர். ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம், 50 சதவீதம் வரை அதிரடி தள்ளுபடி என விதவிதமான ஆஃபர்களை அள்ளிவீசுகிறார்கள். ஆனால் சீனாவில் கண்டறியப்பட்டுள்ள மார்க்கெட்டிங் யுக்தி ஆச்சர்யத்தை ஏற்படுத்தினாலும், கடும் விமர்சனங்களையும் குவித்து வருகிறது.
வழக்கமாக வாடிக்கையாளர்களைக் கவர கடைகளுக்கு முன்பு பிரம்மாண்ட அளவிலான ஜோக்கர் அல்லது கார்டூன் பொம்மைகளை நிறுத்துவது, வண்ண வண்ண விளங்குகளால் அலங்கரிப்பது, பெரிய சைஸ் டீவி வைத்து 3டி விளம்பரம் செய்வது போன்றவற்றை செய்வார்கள்.
ஆனால், இதெல்லாம் பழைய ஸ்டைல்.. இப்போது ட்ரெண்ட் மாறி.. சீன ரீடெய்ல் செயின் புதிய முறையைக் கண்டுபிடித்துள்ளது. ஆம், சீனாவைச் சேர்ந்த ரீடெயில் மார்க்கெட்டிங் நிறுவனம் ஒன்று தனது பொருளை விற்பனைச் செய்ய யாருமே கற்பனை செய்யாத மார்க்கெட்டிங் தந்திரத்தைக் கையில் எடுத்துள்ளது. ஆம், சீனாவைச் சேர்ந்த பிரபல துணிக்கடை ஒன்று இளம் பெண்களுக்கு தனது நியூ மாடல் உடைகளை அணிவித்து கடைக்கு முன்னால் உள்ள டிரெட்மில் மீது நடக்கவைத்துள்ளது. இளம் பெண்களை உயிருள்ள மேனிக்வின்களாக (mannequins) மாற்றியுள்ள இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து பல்வேறு விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
கடைக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள டிரெட்மில்லில் மாடல் உடை அணிந்த பெண்கள் நடந்து செல்வதை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த கடை உரிமையாளர்கள் தங்கள் வியாபாரத்தை மேம்படுத்துவதற்காக இத்தகைய புதுமையான அணுகுமுறையை சீப்பான வியாபார யுக்தி என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
இதனை நவீன கால அடிமைத்தனம் என்றும், பெண்கள் தங்களது கால் வலிக்க எவ்வளவு நேரம் நடப்பார்கள்… எப்படி கழிப்பறையைப் பயன்படுத்துவார்கள் என்றும் சோசியல் மீடியாக்களில் சகட்டுமேனிக்கு சாடி வருகின்றனர்.