உலகம்

46 வயதிலேயே அகால மரணம் – சாதிக்க வேண்டிய நேரத்தில் சறுக்கல்! பின்னணித் தகவல்கள்..!

யூ டியூப் பிரபலம் பிஜிலி ரமேஸ் 46 வயதில் அகால மரணம்…
கல்லீரல் வீங்கி, சிகிச்சை பலன் இன்றி உயிரிழப்பு…
குடி பழக்கத்தால் பறிபோன வாய்ப்புகள் பற்றிய பின்னணித் தகவல்கள்…

சென்னை எம்ஜிஆர். நகர் மார்க்கெட் பகுதியில் வசித்து வந்த பிஜிலி ரமேஷ், ரஜினிகாந்தின் ரசிகர் ஆவார். ஒரு முறை, ரஜினிகாந்தின் இல்லத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்த அவரை, யூ டியூப் பிரபலமான வி.ஜே. சித்து, கலாட்டா செய்து வீடியோ எடுத்து வெளியிட்டார். அன்று முதல் பிஜிலி ரமேஸ் யூ டியூப் உலகில் பெரும் வரவேற்பை பெற்றார்.

Fall சீலிங் வேலை செய்து குடும்பத்தை நகர்த்தி வந்த பிஜிலி ரமேஸ், கடும் குடிபோதைக்கு அடிமையாகி இருந்தார். இந்நிலையில், அவருக்கு சினிமா வாய்ப்புகள், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் அடுத்தடுத்து வந்தன.

அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தாலும், போதிய கல்வி அறிவின்மை, குடிபழக்கம் ஆகியவற்றால், வசனங்களை புரிந்து கொண்டு, உச்சரிக்க முடியாமலும், நடிக்க முடியாமலும் திணறி வந்தார். இருப்பினும் இயக்குநர்கள், அவரது பிரபலத்தை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக, கடின முயற்சிகளை எடுத்து நடிக்க வைத்து வந்தனர். ஆனால் இதற்காக பெரிய ஊதியங்களை அவர் பெறவில்லை.

நாள் கூலி என்ற அளவிலேயே சில ஆயிரங்களை சம்பளமாக கொடுத்து வந்தனர். விஜய் டிவியின் குக் வித் கோமாளியில் அவருக்கு ஓரளவு நல்ல சம்பளம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பிட்ட நேரத்தில் சூட்டிங் ஸ்பாட்டிற்கு செல்வதிலும் அவருக்கு பிரச்னை இருந்துள்ளது. பெரும்பாலும் குடித்துவிட்டு, போதையிலேயே சில சூட்டிங்களுக்கும் சென்றுள்ளார்.

ஓரளவு வாய்ப்புகளும், சம்பளமும் அதிகரித்த நிலையில், மது தனது வேலையை செய்ய ஆரம்பித்தது. கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து, கடும் உடல்நல பாதிப்புகளை சந்தித்ததால், வாய்ப்புகள் கிடைத்தும், எந்த படத்திலும் நடிக்க முடியவில்லை. கல்லீரல் வீங்கி, வயிறு புடைத்து, காணப்பட்டது.

சென்னை அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், வி.ஜே. சித்து உள்ளிட்ட யூ டியூப் பிரபலங்கள் பண உதவி செய்துள்ளனர். எனினும் சிகிச்சை பலன் இன்றி பிஜிலி ரமேஸ் உயிரிழந்துள்ளார்.
மது போதை ஒரு மனிதனின் வாழ்வில் எத்தகைய கொடூர தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை பாடமாக உணர்த்தி விட்டுச் சென்றுள்ளார் பிஜிலி ரமேஸ்.


=========

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button