மக்கள் களத்தில் இறங்கும் தவெக தலைவர் விஜய் ! தமிழக முழுவதும் சுற்றுப்பயணம்… எங்கே ? எப்பொழுது ?

நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியதிலிருந்து விஜய் மக்களை களத்தில் சந்திக்கவில்லை என்ற விமர்சனங்கள் தொடர்கதையாக வந்து கொண்டே இருந்தது.
அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் தவெக தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த சுற்றுப்பயணத்தை தஞ்சாவூரில் இருந்து விஜய் தொடங்க உள்ளதாக கூறப்படும் நிலையில், முதற்கட்டமாக 100 இடங்களில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிய வந்துள்ளது.
விஜய்யின் அரசியல் செயல்பாடுகள் எப்போதுமே விமர்சிக்கப்பட்டு வருவதுண்டு. அதில் தற்போது அவர் நடித்து வரும் ஜனநாயகன் தான் அவருடைய கடைசி படம் என அவர் அறிவித்துள்ளார்.
ஆனால் திரை பிரபலங்கள் முதல் தயாரிப்பாளர்கள் வரை அனைவரும் அவர் இதை ஒரு முறை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கூறி வருகின்றனர். அதேபோல் அவர் நிச்சயம் நடிப்பார் என்ற யூகமும் இருக்கிறது.
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் விஜய். இவர் சுமார் 69 படங்களில் நடித்து முடித்துள்ளார். தற்போது இவர் திரைத்துறையில் இருந்து விலகி தீவிர அரசியலில் குதித்துள்ளார். சில ஆண்டுகளாகவே விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்கிற பேச்சுக்கள் பொதுவெளியில் இருந்த நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி இரண்டாம் தேதி தமிழக வெற்றிக்கழகம் என்கிற கட்சியைத் தொடங்கினார்.
சில ஆண்டுகளாக பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை மாவட்ட வாரியாக அழைத்து அவர்களுக்கு பரிசு மற்றும் விருதுகள் கொடுக்கும் விழாவை விஜய் நடத்தி வந்தார். இது அவருடைய அரசியலுக்கு அடித்தளமாக பார்க்கப்பட்டது.
முதல் தலைமுறை வாக்காளர்களை கவர்வதற்காக அவர் இந்த விழாவை நடத்தி வருவதாக அப்போது விமர்சனம் இருந்தது. பின்னர் ஒரு கட்டத்தில் அவர் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார். தமிழகத்தின் உரிமைகளை மீட்கப் போவதாக கூறி கட்சி தொடங்கிய அவர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள், அம்பேத்கர், பெரியார் ஆகியோரை கொள்கைத் தலைவர்களாகவும், திராவிடமும் தேசியமும் தனது கட்சியின் இரு கண்கள் என்றும் கூறி அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.
தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை கட்சியின் நிர்வாகிகளாக மாற்றினார். தற்போது தமிழகத்தில் ஆளும் திமுக மற்றும் மத்தியில் ஆளும் பாஜக இருவரும் தங்கள் கொள்கை எதிரிகள் என்று கூறி அவர்களை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
இந்த நிலையில், ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் தவெக தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாகவும் இந்த சுற்றுப்பயணத்தை தஞ்சாவூரில் இருந்து விஜய் தொடங்க உள்ளதாக கூறப்படும் நிலையில், முதற்கட்டமாக 100 இடங்களில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிய வந்துள்ளது இது விமர்சனங்களுக்கு ஒரு பதிலாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.