14 வயது சிறுவனால் 23 வயது ஆசிரியை கர்ப்பம் – டியூசன் படிக்கப்போன இடத்தில் நடந்த விபரீதம்…
மருத்துவப் பரிசோதனையில் அந்தப் பெண் ஐந்து மாத கர்ப்பிணி என்பது தெரியவந்துள்ளது

குஜராத் மாநிலம் சூரத்தில், 14 வயது மாணவனால் 23 வயது டியூஷன் ஆசிரியை கர்ப்பமாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 23 வயது டியூசன் ஆசிரியை 14 வயது மாணவனுடன் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து தனிப்படை போலீசார் செல்போன் சிக்னல் மூலமாக நடத்திய தேடுதல் வேட்டையில், குஜராத் – ராஜஸ்தான் எல்லைக்கு அருகே இருவரையும் மடக்கிப் பிடித்தனர்.
இந்நிலையில், மருத்துவப் பரிசோதனையில் அந்தப் பெண் ஐந்து மாத கர்ப்பிணி என்பது தெரியவந்துள்ளது. 14 வயது சிறுவன் தான் அந்த குழந்தையின் தந்தை எனக்கூறியுள்ளார். இதைக்கேட்ட ஒட்டுமொத்த சூரத்தும் அதிர்ச்சியில் அதிர்ந்து போன நிலையில், இதுதொடர்பான பின்னணி வெளியாகியுள்ளது.
சம்பந்தப்பட்ட ஆசிரியை 14 வயது மாணவனுக்கு டியூசன் எடுத்து வந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக டியூசன் எடுத்து வந்த நிலையில், கடந்த ஒராண்டாக இருவரும் நெருங்கிப் பழகியுள்ளனர்.
பல மாதங்களாக பல்வேறு இடங்களில் உடலுறவில் ஈடுபட்டதாக அப்பெண் தெரிவித்துள்ளார். இதனால் தான் 5 மாத கர்ப்பமாக இருப்பதாகவும், அதனால் ஊரை விட்டு ஓடிப்போய் புது வாழ்க்கை அமைக்க திட்டமிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
போலீஸ் விசாரணைக்குப் பிறகு, தனக்கும் அந்த சிறுவனுக்கும் சிறந்த வாழ்க்கை அமைய வேண்டும் என்பதால் அப்பெண் கருவை கலைக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.