டிரம்பின் திட்டம் விரைவில் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் – எலான் மஸ்க்!

ரஷ்யா – உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும் என உலகின் நெம்பர் பணக்காரரும், பிரபல தொழிலதிபருமான எலான் மஸ்க் தெரிவித்துள்ளது உலக நாடுகளை உற்றுநோக்க வைத்துள்ளது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்றதையடுத்து உலக நாடுகளைச் சேர்ந்த பல தலைவர்கள் அவருக்கு தொலைபேசி மூலமாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி டிரம்பிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஃப்ளோரிடாவின் பாம் பீச் ட்ரம்ப் உள்ள தனது மார்-ஏ-லாகோ எஸ்டேட்டில் தான் இந்த தொலைபேசி உரையாடல் நடந்துள்ளது. அப்போது எலான் மஸ்க்கும் டிரம்புடன் இருந்ததாக கூறப்படுகிறது.
ஏற்கனவே தான் வெற்றி பெற்றால் உக்ரைன்-ரஷ்யா போரை 24 மணி நேரத்தில் முடித்துவிடுவேன் என்று ட்ரம்ப் கூறியிருந்தார்.
அந்த வகையில், சுமார் 7 நிமிடங்கள் நடந்த உரையாடலில், டிரம்ப் ஜெலென்ஸ்கியிடம் போரைப் பற்றி கேட்டறிந்ததாகவும், போரை திருத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வது குறித்து எடுத்துரைத்ததாகவும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எலான் மஸ்க் தனது எக்ஸ் தள பக்கத்தில் “அறிவற்ற கொலை விரைவில் முடிவுக்கு வரும். போர்வெறி லாபம் ஈட்டுபவர்களுக்கான நேரம் முடிந்துவிட்டது” எனக்குறிப்பிட்டுள்ளார்.
இதனை நிரூபிக்கும் விதமாக உக்ரைன் அதிபருடனான உரையாடலைத் தொடர்ந்து, ரஷ்ய அதிபர் புதினுடனும் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த உரையாடலின் போது, உக்ரைன் போரைத் தீவிரப்படுத்த வேண்டாம் என்றும், போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தையை முன்னெடுக்க ஆர்வமாக இருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் உக்ரைன் உடனான போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் டிரம்ப் பரிந்துரைத்துள்ளார். இந்த புதின் – டிரம்ப் இடையிலான இந்த உரையாடல் அற்புதமாக இருந்ததாகவும் எலான் மஸ்க் கூறியுள்ளார். அதிபராக பொறுப்பேற்பதற்கு முன்பே கடந்த 3 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த போரை நிறுத்த டொனால்ட் டிரம்ப் எடுத்து வரும் நடவடிக்கைகள் உலக நாடுகளால் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.