மொத்த செலவு ரூ. 5000 கோடி! வெளியான பின்னணி ரகசியம்!

5000 கோடி செலவழித்து கல்யாணம்…
விமானத்திற்கு மட்டும் பல நூறு கோடி…
ஒரு நாள் சாப்பாடு செலவு 200கோடி…
தெருக்கோடியில் நின்று வாயை பிளந்து பார்க்கும் மக்கள்…
இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைக்கும் ஒரு திருமணத்தை முகேஷ் அம்பானி தனது மகன் ஆனந்த் அம்பானிக்கு நடத்தி வைத்துள்ளார். கடந்த சில மாதங்களாக பரபரப்பாக பேசப்பட்டு வந்த கல்யாண செலவுகள் பற்றி கணிப்புகள் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளன.
இந்த திருமணத்திற்கு மொத்தம் 5 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவு செய்யப்படுவதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி தெரிவித்துள்ளது. போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள தகவலின்படி, முகேஷ் அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு 9 லட்சம் கோடி. எனவே 5 ஆயிரம் கோடி ரூபாய் என்பது அவர்களது குடும்ப சொத்து மதிப்பில் அரை சதவீதம் மட்டுமே.
திருமணத்திற்கு முந்தைய இரண்டு நிகழ்ச்சிகளுக்கு மட்டும் தோராயமாக 2 ஆயிரம் கோடி ரூபாயை செலவு செய்துள்ளனர். தற்போது, திருமணத்திற்கு விருந்தினர்களை அழைத்து வருவதற்கு மட்டும் 100 விமானங்களை வாடகைக்கு எடுத்துள்ளனர்.
இதில் 3 விமானங்கள் ஃபால்கன் 2000 வகையைச் சேர்ந்தவை. ஒரு விமானத்தின் வாடகை மட்டும் 33 கோடி ரூபாய். மொத்த விமான வாடகையே பல நூறு கோடி ரூபாயை தாண்டிவிடும் எனத் தெரிகிறது. ஒரு நாள் உணவு செலவு மட்டும் 200கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் எனத் தெரிகிறது.
திருமண நிகழ்ச்சிகளுக்காக, அமெரிக்க இசைக்கலைஞர்கள் ரீஹானா, கனட இசைக்கலைஞர் ஜஷ்டின் பைபர் உள்ளிட்டவர்களுக்கு கோடிகளை வாரி வழங்கியது அம்பானி குடும்பம். அண்மையில் ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் மொபைல் கட்டணங்களை தன்னிச்சையாக உயர்த்தின.
இதில் ஜியோவிற்கு மட்டும் வருடத்திற்கு 17 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக கிடைக்கும் என கூறப்படுகிறது. எனவே கல்யாண செலவு என்பது, வெறும் 5 கோடி என்பதால், அதிலும் அவர்களுக்கு கூடுதலாக 12 ஆயிரம் கோடி மிச்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
====