உலகம்

இந்தியாவில் விற்கப்படும் டாப் 5 விலையுயர்ந்த காபிகள் …!

இந்தியாவை வளரும் நாடும் என சொல்கிறோம். ஆனால் இங்கும் ஒரு கப் காபிக்கு 5 ஆயிரம் முதல் 50 ஆயிரம் என வாரி இறைக்கும் கன்வாண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆமாங்க, உலத்துலேயே காஸ்ட்லியான 5 காபிகள் இந்தியாவில் அமோகமாக விற்பனை செய்யப்படுகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?. அது என்ன காபி, ஆயிரக்கணக்கில் விற்கும் அளவிற்கு அதன் ஸ்பெஷாலிட்டி என்னவென பார்க்கலாம் வாங்க.

‘கோபி லுவாக்’ (Kopi Luwak) உலகிலேயே விலை உயர்ந்த காபி என அழைக்கப்படுகிறது. இது தனி காபி ரகம் அல்ல, இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் உள்ள காபி தோட்டங்களில் விளையும் காபி கொட்டைகளை புனுகு பூனைக்கு சாப்பிடக்கொடுக்கிறார்கள். ஆசிய பனை சிவெட் வகையைச் சேர்ந்த புனுகு பூனைகளின் மலத்தில் இருந்து வெளியாகும் காபி கொட்டைகளில் இருந்து தான் இந்த ஸ்பெஷல் காபி தயாரிக்கப்படுகிறது. இந்த காபியின் ஒரு கப் விலை தரத்தைப் பொறுத்து 8,574 ரூபாய் முதல் 51, ஆயிரத்ஹ்து 452 வரை விற்கப்படுகிறது.

 

Esmeralda Special Coffee

பிளாக் ஐவரி காபி என்பது வடக்கு தாய்லாந்தில், யானைகளால் உண்ணப்படும் அரேபிகா காபி பீன்ஸிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு காபி பிராண்ட் ஆகும். யானைகளின் கழிவுகளில் இருந்து சேகரிக்கப்படும் இந்த காபி, உலகின் மிக விலையுயர்ந்த காபிகளில் ஒன்றாகும். இதன் விலை 42,868 ரூபாய் முதல் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 636 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

பிரான்சின் பேரரசன் நெப்போலியன் போனபார்டுக்கு பிடித்தமான காபியான செயின்ட் ஹெலினா காஃபி உயர்தர சுவை மற்றும் நறுமணம் கொண்டது. செயின்ட் ஹெலினா தீவில் மட்டுமே இது பயிரிடப்படுகிறது. அட்லாண்டிக் பெருங்கடலின் நடுவில், ஆப்பிரிக்காவின் மேற்கு கடற்கரையிலிருந்து சுமார் 1,200 மைல் தொலைவில் அமைந்துள்ளது. எனவே, போக்குவரத்து செலவுகள் அதிகமாக இருப்பதால் இது காஸ்ட்லியான காபியாக மாறியுள்ளது. இதன் விலை 6 ஆயிரத்து 434 ரூபாய்கும்.

இதேபோல் மணம் மற்றும் சுவைக்கு பெயர் போன எல் இன்ஜெர்டோ காபி 8,500க்கும், எஸ்மரால்டா ஸ்பெஷல் காபி 30 ஆயிரத்து 034 ரூபாய் முதல் 85 ஆயிரத்து 792 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button