அம்பானி சகோதர்களின் அறியப்படாத தங்கை! யார் இந்த நீனா கோத்தாரி?

இந்திய பணக்காரர்களின் நெம்பர் ஒன் இடம் பிடித்திருக்கும் முகேஷ் அம்பானியைப் பற்றியும், அவரது மனைவி, மகன்கள், மகள், மருமகள்கள்… ஏன் பேரக் குழந்தைகள் பற்றிக் கூட அடிக்கடி செய்திகள் வெளியாவது உண்டு. முகேஷ் அம்பானி, அனில் அம்பானி சகோதர்களுக்கு இரண்டு சகோதரிகள் இருக்கிறார்கள் என்பது பலருக்கும் தெரியாது. அதிலும் குறிப்பாக கடைசி தங்கை ஒரு வணிக உலகில் தனியாளாக ஒரு சம்ராஜ்யத்தையே நிர்வகித்து வருவது உங்களுக்குத் தெரியுமா?அவர் தான் கோத்தாரி சுகர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் நீனா கோத்தாரி. இவரும் தனது சகோதரர்களைப் போலவே வணிக உலகில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். 1986ம் ஆண்டு பத்ராஷ்யம் கோத்தாரி என்ற தொழிலதிபரை மணத்த நீனா கோத்தாரி, ஆரம்பத்தில் குடும்பத் தலைவியாக தான் இருந்தார். 2003 ஆம் ஆண்டு ஜாவாக்ரீன் ஃபுட் & காபி நிறுவனத்தை தொடங்கி நடத்தி வந்தார். ஆனால் 2015ம் ஆண்டு இவரது கணவர் புற்றுநோயால் இறந்தது, நீனா கோத்தாரி வாழ்க்கையை மாற்றியது. கணவரின் மரணத்தைத் தொடர்ந்து ரூ. 435 கோடி சந்தை மூலதன மதிப்புள்ள கோத்தாரி சுகர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் லிமிடெட்டின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
அவளுடைய பொறுமையும் உறுதியும் பிசினஸில் அவருக்கு வேற லெவல் வெற்றியைப் பெற்றுத் தந்தது.
தலைவர் பதவியை அடுத்து, நீனா எச்.சி. கோத்தாரி குழுமத்தால் நடத்தப்படும் கோத்தாரி பெட்ரோ கெமிக்கல்ஸ் லிமிடெட் & கோத்தாரி சேஃப் டெபாசிட்ஸ் லிமிடெட் ஆகியவற்றின் பொறுப்பாளராக மாறினார். நீனா கோத்தாரியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.52.4 கோடிக்கும் அதிகமாகும். கோத்தாரி சுகர்ஸ் & கெமிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஒட்டுமொத்த சந்தை மூலதன மதிப்பு ரூ. 435 கோடி ஆகும்.அவரது மூத்த மகன் அர்ஜுன் கோத்தாரி, கோத்தாரி சுகர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநராக குடும்ப வணிகத்தை வளர்க்க தனது தாயுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். நீனாவின் மகள் நயன்தாரா, கே.கே. பிர்லாவின் பேரனும், ஷ்யாம் & ஷோபனா நயன்தாராவின் மகனுமான ஷமித் நயன்தாராவை மணந்துள்ளார்.