200 கிலோ எடை கொண்ட வெடிகுண்டுகள் – இஸ்ரேலுக்கும் மீண்டும் சப்ளையை தொடங்கிய அமெரிக்கா

காசாவின் பல பகுதிகள் மீது கொடூரமான தாக்குதல்களை நடத்தி வரும் சூழலில் 200 கிலோ எடை கொண்ட வெடிகுண்டுகளை இஸ்ரேலுக்கு அமெரிக்கா அனுப்பத் தொடங்கியுள்ளது.
காசாவின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் உள்ள பாலஸ்தீனியர்கள் தெற்கு நோக்கி நகருமாறு கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல் உத்தரவிட்டது. இதனையடுத்து, பல லட்சம் மக்கள் ரபா நகரத்தை நோக்கி நகர்ந்தனர்.
கடந்த மே மாதம் ரபா நகரத்தையும் தாக்க இருப்பதாகவும், மக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என உத்தரவிட்டது.
இதற்கு உலகம் முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தன. மேலும் இஸ்ரேலின் போர்க்குற்ற நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா உடந்தையாக இருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்தச் சூழலில் இஸ்ரேலுக்கு 900 கிலோ, 200 கிலோ எடைகொண்ட, வானில் இருந்து வீசப்படும் வெடிகுண்டுகள் சப்ளையை அமெரிக்கா நிறுத்தி வைத்தது.
இந்நிலையில் தற்போது, 200 கிலோ கொண்ட வெடி குண்டுகளை மட்டும் மீண்டும் இஸ்ரேலுக்கு சப்ளை செய்ய அமெரிக்கா உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது மனித உரிமை ஆர்வலர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் 900 கிலோ எடைகொண்ட வெடி மருந்துகளை இஸ்ரேலுக்கு கொடுத்தால், அது, அப்பாவி மக்கள் மீது வீசி விடும் என்பதால், 200 கிலோ எடை கொண்ட வெடிகுண்டுகளை மட்டும் கொடுத்துள்ளதாக விநோத விளக்கத்தை அமெரிக்கா கொடுத்துள்ளது.