காக்னிசன்ட் அலுவலகம் முன்பு குவிந்த ஊழியர்கள்! புகைப்படம், செல்பி!

உலகப் பிரபலம் வாய்ந்த கார் பந்தய வீரர் Fernando Alonso, சென்னையில் உள்ள காக்னிசன்ட் அலுவலகத்திற்கு வருகை புரிந்தார்.அவரை உற்சாகமாக வரவேற்ற காக்னிசன்ட் உயர் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள், அவரிடம் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அவரது, வருகையையொட்டி, அவர் பயன்படுத்தும் ரேஸ் கார் நிறுவனமான AstonMartin கார்கள், காக்னிசன்ட் அலுவலகத்திற்கு முன் நிறுத்தப்பட்டிருந்தன. இதனை ஆவலோடு ஊழியர்கள் பார்வையிட்டு செல்பி எடுத்தனர்.
43 வயதான ஸ்பெயின் வீரரான Fernando Alonso உலக அளவிலான பார்முலா 1 கார் பந்தயப் போட்டியில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றவர். 395 போட்டிகளில் இதுவரை கலந்து கொண்டு, பிரபலம் அடைந்தவர். சென்னை காக்னிசன்ட் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்காக அவர் அழைக்கப்பட்டுள்ளார்.முன்னதாக சென்னை தலைமை அலுவலகம் தாம்பரம் மெப்ஸ் பகுதிக்கு மாற்றப்பட்ட செய்தி, பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
இதனைத் தொடர்ந்து அண்மையில், அந்த நிறுவனத்தின் சிஎம்ஓ எனப்படும் chief marketing officer, Gaurav Chand, என்பவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதற்கு பதிலாக தற்காலிக CMO வாக அந்த நிறுவனத்தின் senior vice president ஆக இருந்த தியா ஹைடன் (Thea Hayden) என்பவர் நியமிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.