ஆனந்த் அம்பானி அணிந்துள்ள வாட்ச் விலை ரூ. 12.5 கோடி!

புது மாப்பிள்ளை ஆனந்த் அம்பானி அணிந்துள்ள வாட்ச் விலை ரூ. 12.5 கோடி…
அது போன்ற பல சுவிட்சர்லாந்து வாட்சுகளை வைத்துள்ளதாக தகவல்…
இந்தியா ஏழை நாடா அல்லது பணக்கார நாடா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கு… உண்மையிலேயே இந்தியா பணக்காரர்களால் நடத்தப்படும் ஒரு ஏழை நாடு என்பது சரியாக இருக்கும்… இங்க திருமணம் செய்து கொள்ள பணம் இல்லாமல் பல கோடி பேர் இருக்காங்க…
திருமணம் செய்ய பணம் இருக்கு… ஆனா திருமணம் முடிஞ்ச பிறகு, மனைவி, குழந்தைகளை வச்சு காப்பாத்த முடியுமா என்ற சந்தேகத்தில, கல்யாணம் பண்ணாம பல கோடி பேரு இருக்காங்க… இந்த நிலைல தான் முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானி திருமணம் குறித்த செய்திகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கு…
திருமணத்துக்கு முன்னர் 2 திருமண நிகழ்ச்சிகள நடத்திய ஆனந்த் அம்பானி, தற்போது, இறுதிக் கட்டத்துக்கு வந்திருக்காரு… அதாவது, வரும் ஜுலை 12 ஆம் தேதி அவருக்கு திருமணம் நடைபெற இருக்கு… இதற்கு முன்னால நடந்த நிகழ்ச்சிகளுக்கே, இதுவரை 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல செலவு செஞ்சிருக்காங்க அம்பானி குடும்பம்…
தற்போது, திருமணத்துக்கு அதைவிட பல மடங்கு செலவு செய்ய தயாராகி இருக்காங்க… இந்தத் தகவல்களை அவங்களே ஊடகங்களுக்கும் தம்பட்டம் அடிச்சிட்டு இருக்காங்க… இந்த நிலைல தான் ஆனந்த் அம்பானி கையில கட்டியிருக்க சுவிட்சர்லாந்து வாட்ச் பற்றி செய்திகள் வைரலாகிட்டு வருது… இந்த வாட்ச் விலை 12.5 கோடி ரூபாய் என்று கூறப்படுது…
உலகத்தில வெறும் 30 பேர் கிட்ட மட்டும் தான் இந்த வாட்ச் இருக்காம்… அதுல ஒருத்தர் ஆனந்த் அம்பானி. இந்த வாட்ச் உடைய விலை இவ்வளவு அதிகமாக இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கு… குறிப்பா, அந்த வாட்ச்ல நவ ரத்தினக் கற்கள், டைட்டானியம் உள்ளிட்ட பல பொருட்கள் சேர்க்கப்பட்டு இருக்கு… இந்த வாட்ச் பிரபல வாட்ச் தயாரிப்பு கம்பெனியான Richard Mille நிறுவனத்தால தயாரிக்கப்பட்டிருக்கு…
இந்த ஒரு வாட்ச் மட்டும் அல்ல, இது மாதிரியான பல வாட்சுகளை ஆனந்த் அம்பானி வச்சிருக்காரு…
இவ்வளவு ரூபா கொடுத்து, வாங்கப்பட்டுள்ள இந்த வாட்சும், நாம கையில கட்டி இருக்கிற, 200 ரூபாய் வாட்சும் ஒரே நேரத்த தான் காட்டப் போகுது… பிறகு எதுக்கு இவ்வளவு ரூபாய்க்கு வாட்சு…
நீயும் நானும் எப்போதும் சமம் அல்ல என்பதை போகும் இடமெல்லாம் சொல்லாமல் சொல்வதற்கு தான்… இதுபற்றிய உங்களுடைய கருத்துக்கள நீங்க பதிவு செய்ங்க…
=====