விளையாட்டு

இண்ஸ்டகிராம் கவர்ச்சி புகைப்படங்களுக்கு கிடைத்த வரவேற்பு – வாழ்க்கையை இழந்த ஒலிம்பிக் நீச்சல் வீராங்கனை!

இண்ஸ்டகிராம் கவர்ச்சிப் படங்களுக்கு கிடைத்த வரவேற்பு….
புகழ் மயக்கத்தால், தலைகால் புரியாமல் ஆடிய நீச்சல் வீராங்கனை…
அழகே ஆபத்தாக மாறி எதிர்காலத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த சம்பவம்…

பராகுவே நாட்டைச் சேர்ந்த 20 வயது மாணவி லுவானோ அலோன்சோ, தனது கவர்ச்சியால் இண்ஸ்டகிராமில் தொடர்ந்து, பிரபலமாக இருந்து வருகிறார். தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு சுமார் 10 லட்சம் ரசிகர்களை பெற்றுள்ளார். இதுவே இவருக்கு தற்போது, வினையாக மாறியுள்ளது.

பராகுவே சார்பில் ஒலிம்பிக்கில் 100மீட்டர் Butterfly பிரிவில், இடம்பெற்றார். இவர் ஒலிம்பிக் கிராமத்திற்கு வந்ததது முதலே ஊடகங்களின் கேமராக்கள் இவரை மொய்க்கத் தொடங்கின. இவரும் ஊடகங்களை கவர்வதற்காக விளையாட்டில் கவனம் செலுத்துவதை விட்டு விட்டு, அநாகரீகமான, கவர்ச்சியான உடைகளை அணிந்து, புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

இந்த நிலையில், காலிறுதியில் வென்ற லுவானோ, அரையிறுதியில் வெறும் 24 நொடிகளில், வெற்றிவாய்ப்பை இழந்தார். அதே நேரம் தொடர்ந்து ஒலிம்பிக் கிராமத்தில் தங்கி, சக வீரர்களுக்கு உற்சாகம் அளிக்காமல், பாரிஸ் நகரத்தை சுற்றிப் பார்த்து, அங்கிருந்து கவர்ச்சி புகைப்படங்களை எடுத்து, இண்ஸ்டகிராமில் பதிவிட புறப்பட்டு விட்டார்.

இதனால் பராகுவே ஒலிம்பிக் அணியின் கடும் கோபத்திற்கு ஆளான லுவானோ, அங்கிருந்து, வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. விளையாட்டில் கவனம் செலுத்தாமல் புகைப்படங்கள் எடுப்பதிலேயே கவனம் செலுத்தியது, அநாகரீகமாக கவர்ச்சிகரமாக உடை அணிந்தது, சக வீரர்களுடன் மோசமான நடத்தை, உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களை சுமத்தி, ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து வெளியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் கடும் கோபம் அடைந்த, லுவானோ தான் பராகுவே அணிக்காக விளையாட இனி விரும்பவில்லை என்றும் இந்த போட்டியுடன் ஓய்வு பெற்றுக் கொள்வதாகவும், படிப்பை தொடரப்போவதாகவும் அறிவித்துள்ளார். முன்னதாக அவர் அமெரிக்க அணிக்காக விளையாட விருப்பம் தெரிவித்ததும், அவர் மீதான நடவடிக்கை காரணம் என கூறப்படுகிறது.

இண்ஸ்டகிராம் வலைதளத்தில் லுவானோ வெளியிட்ட மிதமிஞ்சிய கவர்ச்சிப் புகைப்படங்கள், அதற்கு கிடைத்த வரவேற்பு, அதனால் ஏற்பட்ட தலைக்கணம் ஆகியவை தற்போது, அவரது விளையாட்டு வாழ்க்கையையே முடிவுக்கு கொண்டுவந்துள்ளதாக விமர்சிக்கப்படுகிறது.
ஒலிம்பிக்கில் ஏற்பட்ட இந்தச் சர்ச்சை உலகம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது.

====

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button